இளையராஜா பாராட்டிய 'அய்யன்'!
சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நடித்துள்ள அய்யன் படம் சிறப்பாக வந்துள்ளதாக அதன் இயக்குநர் கேந்திரன் முனியசாமியைப் பாராட்டியுள்ளார் இசைஞானி இளையராஜா.
வர்ஷா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.சேகர் ராஜன் தயாரித்துள்ள படம் 'அய்யன்". மாமதுரை படத்தில் நாயகனாக அறிமுகமான வாசன் இந்தப் படத்தில் 'முனியசாமி' எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக அரியசெல்வி எனும் பாத்திரத்தில் திவ்யா பத்மினி எனும் புதுமுகம் நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது இசைஞானி இளையராஜா முதல் பாடல் சிடியை வெளியிட, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பெற்றுக்கொண்டார்.
படம் பற்றி இளையராஜா கூறுகையில், "இயக்குநர் கதை சொல்றப்போ பிடிச்சிருந்தது. அவருடைய இளவயது வேகம் அதில் தெரிந்தது. இப்போது படத்தை முடித்துவிட்டு வந்து காட்டியதும் அவருடைய திறமையை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில் பாடலாசிரியர்களுடன், எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவரையும் பாடல் எழுத வைத்திருக்கிறேன். எனக்கு படம் பிடிச்சிருக்கு. இருந்தாலும் படத்தை மக்கள் பார்த்துதான் அவுங்க கருத்தை சொல்லனும்..." என்றார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் ஏ.ஆர். கேந்திரன் முனியசாமி.
படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது.


Click it and Unblock the Notifications











