twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஞ்சலிதேவி சதாபிஷேகம்: கருணாநிதி, ஜெயலலிதா நேரில் வாழ்த்து

    By Staff
    |

    Anjalidevi
    மூத்த நடிகை அஞ்சலிதேவியின் சதாபிஷேகம் நிகழ்ச்சி இன்று காலை சென்னையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று அவரை வாழ்த்தினர்.

    எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என பெரும் நடிகர்களுடன் நடித்தவர் அஞ்சலிதேவி.

    இன்று அவருக்கு 80வது பிறந்தநாள். சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில், மேடையில் அஞ்சலிதேவியின் கணவர் ஆதி நாராயணராவ் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அருகில் அஞ்சலிதேவி உட்கார்ந்து இருந்தார்.

    அதிகாலை 5.45 மணிக்கு குடும்பத்தினர் சார்பில் சிறப்பு பஜனை மற்றும் பூஜைகள் நடந்தன.பின்னர் வேதபாராயண நிகழ்ச்சி நடந்தது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகினர் பலர் வாழ்த்தினர்.

    முதல்வர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாளுடன் நேரில் வந்து அஞ்சலிதேவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    மத்திய அமைச்சர் ராசா, நடிகர்கள் பிரபு, அர்ஜூன், எஸ்.வி. சேகர், தயாரிப்பாளர் ராம்குமார், பழைய கதாநாயகிகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, ராஜ சுலோசனா, சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, காஞ்சனா, சாரதா, குசலகுமாரி, ரம்யாகிருஷ்ணன், எஸ்.என். லட்சுமி ஆகியோர் வாழ்த்தினர்.

    சினிமா பின்னணி பாடகி சுசீலா, எழுத்தாளர் சோ, டைரக்டஇயக்குநர் முக்தா சீனிவாசன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். அஞ்சலிதேவியின் பேரன், பேத்திகள் மற்றும் உறவினர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

    அஞ்சலிதேவி பிறந்த நாள் விழாவில் சாய்பாபா பங்கேற்பதாக இருந்தது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது. அஞ்சலிதேவிக்கு வாழ்த்து செய்தியும் பிரசாதமும் சாய்பாபா அனுப்பி இருந்தார்.

    ஜெயலலிதா வாழ்த்து...

    முன்னதாக, அஞ்சலிதேவியின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா.

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அஞ்சலிதேவியின் இல்லத்துக்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் ஜெயலலிதா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X