உறுப்பினராகாதவர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து உறுப்பினராக்க நடிகர் சங்கம் முடிவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார்களாம். அதன்படி, நடிகர், நடிகைகள் உறுப்பினராக வேண்டும் என்று சங்கத்தின் பொதுக்குழுவில் ஏற்கனவே வற்புறுத்தப்பட்டது. உறுப்பினராகாதவர்கள் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இதற்கான கெடு தேதி முடிந்த பிறகும் பலர் உறுப்பினராகவில்லை.
இவர்களை நடிக்க அனுமதிக்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுவிக்கப்பட்டு இருந்தது. அதையும் மீறி புதுமுக நடிகர், நடிகைகள் நடிக்க வைக்கப்படுகின்றனர்.
இதனை தடுக்க படப்பிடிப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து சங்கத்தில் உறுப்பினர் ஆகாதவர்களை கண்டுபிடிப்பது என்றும் அவர்களிடம் படப்பிடிப்பு தளத்திலேயே விண்ணப்பங்கள் கொடுத்து கட்டாயப்படுத்தி உறுப்பினராக்குவது என்று முடிவு செய்துள்ளனராம்.
இதற்காக ஏகப்பட்ட குழுக்களையும் போட்டுள்ளனர். இந்தக் குழுக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்களுக்குப் போய் கையும் களவுமாக உறுப்பினராகாத நடிகர் நடிகையர்களைப் பிடித்து கட்டாயப்படுத்தி உறுப்பினராக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாம்.


Click it and Unblock the Notifications











