twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீரப்பன் சினிமா: தயாரிப்பு-முத்துலட்சுமி; டைரக்ஷன்- ராம் கோபால் வர்மா!!

    By Shankar
    |

    Veerappan and Muthulakshmi
    சென்னை: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தனது கணவரின் வீரசாகஸங்கள் குறித்தும், போலீசின் அத்துமீறல்கள் குறித்தும் புதிய சினிமா தயாரிக்கிறார். இந்தப் படத்தை பிரபல இந்தி - தெலுங்குப் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்குகிறார்.

    தமிழக-கர்நாடக மலைப்பகுதியில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வீரப்பன் சில வருடங்களுக்கு முன்பு தமிழக அதிரடிப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    வீரப்பன் மீது 100-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும், சந்தன கட்டை கடத்தல், ஆயுத கடத்தல் வழக்குகள் உள்ளன. போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வீரப்பன் பற்றி சினிமா படம் எடுக்க பலர் முன்வந்தனர்.

    இது பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டனர். ஆனால் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தனது அனுமதி இல்லாமல் வீரப்பன் சினிமா எடுக்ககூடாது என்று நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டார். தற்போது வீரப்பன் பற்றிய சினிமாவை முத்துலட்சுமியே எடுக்க உள்ளார். இந்தப் படத்தை ராம்கோபால் வர்மா இயக்குகிறார். ஏற்கெனவே இருவரும் இதுகுறித்துப் பேசி இருந்தனர். ஆனால் முத்துலட்சுமி சிறைக்குப் போனதும் இந்தப் படமும் நின்றுவிட்டது.

    கர்நாடக சிறையில் 2 வருடங்கள் அடைக்கப்பட்டு இருந்து முத்துலட்சுமி நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவர் சென்னை திரும்பியதும் இதற்கான வேலையில் இறங்குவார் என்று கூறப்படுகிறது. வீரப்பனின் மகள்கள் வித்யாராணி, பிரபா ஆகியோர் சென்னையில் தங்கி படித்து வருகிறார்கள். மேட்டூரிலிருந்து வந்து மகள்களுடன் தங்கியிருக்க முத்து லட்சுமி முடிவு செய்துள்ளார்.

    மூத்த மகள் வித்யாராணி பி.ஏ., படிக்கிறாள். 2-வது மகள் பிரபா என்ஜினீயரிங் படிக்கிறாள். அவர்களை நன்கு படிக்க வைத்து அமைதியான வாழ்க்கை வாழ திட்டமிட்டு இருக்கிறார். தனது மகள்கள் டாக்டராகி சேவை செய்ய வேண்டும் என்பது வீரப்பனின் விருப்பம். ஆனால் வித்யாராணி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

    வாழ்க்கை வரலாறு

    மேலும் முத்துலட்சுமி தனது வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுதவும் திட்டமிட்டுள்ளார். 6 வருடங்களாக அதிரடிப்படை காவலில் இருந்து சித்ரவதை அனுபவித்தது, அதிரடிப்படையின் அத்துமீறல்கள் பற்றி அதில் எழுதுகிறார். தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த புத்தகம் வெளியிடப்படும். இதனை பிரபல புத்தக நிறுவனம் வெளியிட தயாராக உள்ளது.

    முத்து லட்சுமிக்கு இப்போதைக்கு வேறு வருமானம் எதுவும் இல்லை. 2 மகள்களை வக்கீல் உள்பட சிலர் படிக்க வைத்து உதவி செய்து வருகிறார்கள். கோபிநத்தத்தில் வீரப்பனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இனி அந்த நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் சுயசரிதை, சினிமா படம் எடுக்க அனுமதி வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றின் மூலம் அமைதியான வாழ்க்கை வாழ முடிவெடுத்துள்ளாராம்.

    கணவனின் தவறுக்கு மனைவி தண்டனை அனுபவிப்பதா?

    முன்னதாக முத்துலட்சுமி ஜெயிலில் இருந்து விடுதலையானதும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "நான் எந்த தவறும் செய்யவில்லை. கடவுள் என் பக்கம் இருக்கிறார். சாமுண்டீஸ்வரி என் மீது கருணை காட்டி இருக்கிறார்.

    எந்த தவறும் செய்யாத என் மீது போலீசார் குற்றம் சாட்டினார்கள். வீரப்பன் செய்த குற்றங்களுக்கு நான் உடந்தையாக இருந்ததாக வழக்கு தொடர்ந்தனர். 5 வழக்குகளில் இருந்தும் நான் விடுதலையாகி விட்டேன். கணவன் செய்த தவறுகளுக்கு மனைவியை தண்டிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது.

    வீரப்பன் மனைவி என்ற ஒரே காரணத்துக்காக என் கணவர் இறந்து பல ஆண்டுகளாகியும் கோர்ட்டு... வழக்கு என என்னை அலைய வைத்து விட்டார்கள். எப்படியும் உண்மை ஜெயிக்கும், நீதி கிடைக்கும் என்று உறுதியாக எண்ணினேன். அதன்படி நீதி தேவதையும் கண் திறந்தாள். எனக்கு நீதியும் கிடைத்து விட்டது.

    இப்போது எனது லட்சியம் எல்லாம் எனது மகள்களின் வருங்கால வாழ்க்கைதான். அவர்களை நன்கு படிக்க வைத்து ஆளாக்கி நல்ல வாழ்க்கை அமைத்து கொடுப்பேன். எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் ஆரம்பத்தில் இருந்தது. இப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

    அந்த தருணத்திற்காக காத்து இருக்கிறேன். எனினும் அரசியல் வாழ்க்கையை விட இப்போது எனது மகள்களின் வாழ்க்கைதான் முக் கியம். எனது சிறை வாழ்க்கை அதிரடிபடை வீரர்களின் அத்து மீறல்கள் குறித்து புத்தகம் எழுதி விரைவில் அதை தமிழிலும் கன்னடத்திலும் வெளியிடுவேன்," என்றார்.

    English summary
    Forest brigand Veerappan's wife Muthulakshmi to join hands with Bollywood director Ramgopal Varma for a movie titled Veerappan. The film is based on the real life story of Veerappan and produced by Muthulakshmi. She also planned to write her autobiography soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X