நடிகர் நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை செய்த சாய்ரா பானு!

By Chakra

Sairabanu
விபச்சார வழக்கில் கைதான பிரபல நடிகை சாய்ரா பானு, தமிழ், தெலுங்கு நடிகர்-நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை செய்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இவரிடமும் பிரபல நடிகைகளின் செல்போன் எண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் இது குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகத் துவங்கியுள்ளன.

தெலுங்கு நடிகைகள் சாய்ரா பானு, ஜோதி இருவரையும் விபசார வழக்கில் ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர். போதை பொருள் கடத்தல்காரர்களை பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டபோது, இந்த இரு நடிகைகளும் சிக்கியதாக போலீஸ் கமிஷனர் அறிவித்தார். இரு நடிகைகளுமே தெலுங்குப் பட உலகில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள். இவர்கள் பிடிபட்டதும் உடனடியாக விடுவிக்குமாறு அரசியல்வாதிகளிடம் இருந்து ஏகப்பட்ட நெருக்குதல்கள் வந்துள்ளன போலீசாருக்கு. வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.

ஆனால் போலீசார் அதற்கு அடிபணியாமல் வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தி விட்டனர்.

தற்போது இரு நடிகைகளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சாய்ரா பானு பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதை பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே தெலுங்கு பிரபல நடிகர் ரவிதேஜாவின் தம்பிகள் பரத்ராஜ், ரகுபாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பரத் ராஜூக்கும் சாய்ராபானுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே வீட்டில் சிலகாலம் 'லிவிங் டுகெதர்' ஸ்டைலில் குடித்தனம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனவே போதை பொருள் கடத்தலில் சாய்ரா பானுவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

நடிகர், நடிகைகளுக்கு சாய்ரா பானு மூலம்தான் போதை பொருள் சப்ளை நடந்து இருக்க வேண்டும் என்றும் போலீஸ் கருதுகிறது. சாய்ரா பானுவிடம் பிரகபல நடிகை நடிகர்களின் தொலைபேசி எண்களும் உள்ளன.

யாருக்கெல்லாம் அவர் போதை மருந்து சப்ளை செய்தார், அவருக்கு போதை மருந்து விற்ற பெரும் புள்ளி யார் போன்றவை குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சாய்ராபானுவின் செல்போன் நம்பர்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X