தலைப்பு தமிழில் இல்லாவிட்டால் வரிவிலக்கு கிடையாது-தமிழக அரசு

By Sudha

அரசு விதித்த நிபந்தனைப்படி தமிழில் பெயரிடப்படாமல் வெளிவரும் திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது என தமிழக அரசு திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழில் பெயரிடப்படுகின்ற திரைப்படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரி முழுமையாக விலக்களிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர், திரைப்படத் துறையினரோடு கலந்தாலோசித்து அறிவித்ததற்கு இணங்க அந்த அறிவிப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் கவனமாகக் கருத்தில் கொண்டு தமிழ்ப் படங்கள் தயாரித்தவர்கள் கேளிக்கை வரி விலக்கை பெற்றுப் பயனடைந்துள்ளனர்.

இடையில் ஒரு சிலர் தங்கள் விருப்பத்துக்குப் பெயர்களை வைத்துக் கொண்டு, அதுவும் தமிழ்தான் என்று வாதாடுவதும் -

வரிவிலக்கு கோரிப் பரிந்துரை செய்வதும், தற்போது வழக்கமாகி வருகிறது.

எனவே தொடக்கத்தில் அரசு விதித்துள்ள நிபந்தனைப்படி, எந்த ஒரு திரைப்படமும் தமிழில் பெயரிடப்படாமல் வெளிவருமேயானால், அந்தத் திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது, என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் பேரன் தொடர்புடைய ஒரு படத்துக்கு வ - குவார்ட்டர் கட்டிங் எனப் பெயர் சூட்டியிருப்பதும், விஜய் நடிக்கும் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கு ராஸ்கல் என்று பெயர் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் வ என்றால் என்ன அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டால், கால் (குவார்ட்டர்) என்பதற்கு தமிழில் வ என்ற வார்த்தை இருப்பதாக தெரிய வந்ததால் அவ்வாறு வைத்ததாக புரியாத விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

இதேபோல தலைப்பை மட்டும் தமிழில் வைத்துக் கொண்டு, தமிழுக்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல், ஆபாசங்களை கலந்து, அறுவறுப்பான வசனங்கள், ஆங்கில வரிகளுடன் கூடிய பாடல்கள் என மசாலா படங்களாக எடுப்பவர்களையும் அரசு சற்று கடிவாளம் போட்டு கட்டுப்படுத்த வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X