போலி ஜாதகம் கொடுத்து ஏமாற்றியவர் இயக்குநர் ஹரி! - வனிதா

பத்திரிகையாளர்களிடம் அவர் நேற்று கூறுகையில், "30 வருடம் வளர்த்து ஆளாக்கிய எனது தந்தை, என்னை மகள் இல்லை என்று சொல்லிவிட்டார். ஏன் இப்படி நடந்துகொண்டார் என்று முதலில் என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணம், எனது தங்கை பிரீத்தாவை மணந்துள்ள இயக்குநர் ஹரி. அவர்தான் பின்னால் இருந்துகொண்டு எனது தந்தையை தூண்டிவிடுகிறார் என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.
ஹரி டைரக்ஷனில் அருண் விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று எனது தந்தை வற்புறுத்தி வருகிறார். ஆனால் ஹரி ஏமாற்றி வருகிறார். இதற்காகத்தான் ஹரியின் கட்டுப்பாட்டில் எனது தந்தை இருக்கிறார். இந்த சினிமா ஆசையைக் காட்டி மொத்த சொத்துக்களையும் சுருட்டும் திட்டத்தில் இருக்கிறார் ஹரி.
ஹரியின் கதையை சொன்னால் நிறைய விஷயங்கள் அசிங்கமாகிவிடும். எனது தங்கை பிரீத்தாவை நான் தான் அவருக்கு திருமணம் செய்து வைத்தேன். அப்போதெல்லாம் அவர், என்னை அண்ணி, அண்ணி என்று அழைப்பார். பிரீத்தாவுக்கும், அவருக்கும் 18 வயது வித்தியாசம் உள்ளது. இதை மறைக்க போலியான ஜாதகத்தை கொடுத்து எனது தங்கையை மணந்து கொண்டார். அவர்தான் அடியாட்களை ஏவி விட்டு மிரட்டுகிறார்.
டி.ஜி.பி.யிடம் நான் கொடுத்த புகார் மனுவில் ஹரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளேன். ஒரு பெண் என்ற முறையில் இன்னொரு பெண்ணான எனக்கு, டி.ஜி.பி. நியாயம் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். திங்கட்கிழமை அன்று புறநகர் போலீஸ் கமிஷனரையும் சந்திக்க உள்ளேன். பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் அருண் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று நான், அவரிடம் வற்புறுத்துவேன்...," என்றார்.


Click it and Unblock the Notifications











