Don't Miss!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விஜய்27 வருட காமன் டீபியை வெளியிட்ட மோகன் ராஜா
சென்னை: டிசம்பர் 4, 1992 அன்று வெளியானது நாளைய தீர்ப்பு படம் ,அந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் ,இயக்குனர் மகன் என்பதால் வாய்ப்பு கிடைத்தது என்று பலரும் கேலி பேச தொடர் தோல்விகளையே முதலில் விஜய் சந்தித்தார் ,1996ல் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக படம் தான் விஜய்க்கு முதல் ஹிட் ,அதன் பின் விஜய்க்கு தோல்விகளை எப்படி தாண்டி வருவது என்பதை உணர்ந்தவராகினார் .
90கள் இறுதியில் சில வெற்றி படங்களுடன் 2000த்திற்கு நுழைந்தது முதல் அதன் பின் அவரின் ஒவ்வொரு படங்களும் திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது ,ஒரு நேரத்தில் விஜய் படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு இணையான வெற்றியை பெற்றது. அப்போது சூழலில் விஜய் தான் தமிழ் சினிமாவின் சிம்ம சொப்பனம் ,விஜயின் கில்லி படமெல்லாம் ஒரு வருடம் ஓடியது .
இதே நேரத்தில் விஜயின் மார்க்கெட் தமிழ்நாட்டில் இருந்த அதே அளவிற்கு கேரளாவிலும் பெருகியது ,கேரளாவில் விஜய்க்கு அங்கு உள்ள பெரிய ஹீரோக்களுக்கு நிகரான ஓப்பனிங் கிடைத்தது .மேலும் இங்கு ஓரளவுக்கு வெற்றி பெற்ற வேலாயுதம் படம் கேரளாவில் நூறு நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்தது .இவ்வளவு பெரிய மார்க்கெட் இருந்தும் விஜய் இதுவரையில் நேரடி மலையாள படம் ஒன்றில் கூட நடித்தது இல்லை .
இந்நிலையில் இடையில் சில வருடங்கள் விஜய் படங்கள் தோல்விகளை சந்தித்தாலும் ,அதிலிருந்து விஜய் தனது விடாமுயற்சி காரணமாக மீண்டு வந்தார் .இதன் பின் விஜயை ஆரம்பத்தில் இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று விமர்சித்த ஊடகங்கள் அவரின் வளர்ச்சியை கண்டு இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கருத்தை தெரிவித்தது .விஜய் மேடைகளில் நாகரீக முறையில் தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார் .
தற்போது விஜயின் படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங் வேறு எந்த ஹீரோவுக்கும் தமிழ்சினிமாவில் கிடையாது என்றே சொல்லலாம். இப்படி உட்சநட்சத்திரமாக வளர்ந்து உள்ள விஜய் சினிமாவில் கால் பதித்து டிசம்பர் நான்கோடு 27 வருடங்கள் ஆகின்றன .இதனை கொண்டாடும் வகையில் மோகன் ராஜா விஜய் ரசிகர்களின் சார்பில் உருவாக்கப்பட்ட 'காமன்டீபி'யை ரிலீஸ் செய்துள்ளார் .விஜயும் மோகன் ராஜாவும் வேலாயுதம் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைய தளபதி , தளபதியாக மாறி பல ரசிகர்களின் மனதில் அதிபதியாக இருக்கும் விஜய் நல்ல நல்ல படங்களை கொடுக்க வேண்டும். பல புதிய சாதனைகள் செய்ய வேண்டும்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!