For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  27 வருஷம் ஆகிடுச்சா.. இன்னிக்கும் 27 வயசு பையன் போல ஆடுவாரு.. தளபதி என்ட்ரி செதறு செதறு!

  |
  Thalapathy Vijay Telugu Remake Movies | Vijay Remake Movies

  சென்னை: 27 வருடங்கள், 63 படங்கள், சினிமா ரசிகர்களை தனது நடிப்பாலும், நடனத்தாலும் என்டர்டெயின் பண்ணி வரும் கோலிவுட்டின் முடி சூடா மன்னன் விஜய் இன்றும் என்றும் ரசிகர்களின் தளபதி தான்.

  டிசம்பர் 4, 1992ம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தில் நடிகர் விஜய் அறிமுகமானார். இந்த மூஞ்சியெல்லாம் நடிக்க வந்துடுச்சு என கலாய்த்த கூட்டம் எல்லாம், 1996ம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படத்தை பார்த்து தங்களின் வாய்களுக்கு பூட்டுப் போட்டு கொண்டன.

  அதற்கு அடுத்த ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை விஜய்க்கு மேலும் ஒரு மாபெரும் வெற்றி படமாக மாற தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நட்சத்திரமாக இளைய தளபதியாக மாறினார் விஜய்.

  நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் அன்பான ரசிகர்களின் ஆர்ப்பாட்டமான ஆதரவுக்கு பரிசாக ப்ரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார், பிகில் அடுத்து தளபதி 64 என தெறிக்கவிட்டு ரசிகர்களின் தளபதியாய் சிம்மாசனம் ஏறியுள்ளார்.

  தமிழ் மறந்து போன அதிதி பாலன்.. மலையாளத்தில் சம்சயிக்க முடிவு!தமிழ் மறந்து போன அதிதி பாலன்.. மலையாளத்தில் சம்சயிக்க முடிவு!

  27 வருஷம்

  27 வருஷம்

  தளபதி விஜய்யின் முதல் அறிமுக படமான நாளைய தீர்ப்பு வெளியாகி இன்றுடன் 27 வருடங்கள் ஆகிறது. கிங் ஆஃப் கோலிவுட்டாக 27 வருடங்களை வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகிறார் நடிகர் விஜய்.

  தல – தளபதி சண்டை

  தல – தளபதி சண்டை

  ராஜபார்வையில் இணைந்து நடித்த இரு இளம் நடிகர்கள், தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் ராஜாக்களாக மாறுவார்கள் என அந்த படத்தின் ரிலீஸின் போது யாரும் கனவிலும் கண்டிருக்க மாட்டார்கள். இருவரின் தனிப்பட்ட முயற்சி மட்டும் இடைவிடாத உழைப்பின் காரணமாக இன்னமும் கோலிவுட்டை ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால், தல - தளபதி ரசிகர்களின் தேவையில்லாத சண்டைகள் தொடர்ந்து அவர்களின் கண்ணியத்திற்கு தொல்லை கொடுத்து வருவது எப்போது தான் நிற்குமோ தெரியவில்லை.

  மாஷ்-அப்

  தளபதி விஜய்யின் 27 வருட திரை அனுபவத்தை ரசிகர்கள், மாஷ்-அப்களாக உருவாக்கி தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  தளபதி விஜய்க்கு இப்படியொரு அர்த்தம்

  ரசிகர்கள் அதிகமாக இருந்தால் அவர் நல்ல நடிகர் ௭ன்று அர்த்தம், எதிரிகள் அதிகமாக இருந்தால் அவர் நல்ல மனிதர் என்று அர்த்தம், இவை இரண்டும் சேர்ந்து இருந்தால் அது தளபதி விஜய் என்று அர்த்தம்! என இந்த ரசிகர் தளபதி விஜய்க்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்துள்ளார்.

  டிரெண்டிங்

  தளபதி விஜய் 27 வருடங்கள் கோலிவுட்டில் ஆட்சி செய்து வருவதை முன்னிட்டு, #27YrsOfKwEmperorVIJAY, #Thalapathy, #Bigil என பல ஹேஷ்டேகுகளை உருவாக்கி ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதில், #27YrsOfKwEmperorVIJAY என்ற ஹேஷ்டேக் மட்டும் 9 லட்சம் ட்வீட்டுகளை தாண்டி ஒரு மில்லியன் ட்வீட்டை நெருங்க உள்ளது.

  ரஜினி சாதனையை முறியடிக்க

  கோலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான ரஜினியின் சாதனைகளை முறியடிக்க தளபதி விஜய்யால் தான் முடியும் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

  மகுடம் சூடி வருகிறோம்

  'எந்த ஒரு மேடை ஏறினாலும் எங்களை ஏற்றி தலையில் வைத்து பேசுவதாலே தெரியல தலைவா உங்கள் தலைக்கு நாங்க மகுடம் சூடி வருகிறோம்', என இந்த ரசிகர் உள்ளம் குளிர வாழ்த்தியுள்ளார்.

  எதுவும் சொல்ல வேண்டாம்

  இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம் என விஜய் நாளைய தீர்ப்பில் அறிமுகம் ஆன புகைப்படத்தையும் சர்கார் இசைவெளியீட்டு விழா புகைப்படத்தையும் பதிவிட்டு இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

  English summary
  27 years of Kollywood Emperor Vijay Hashtag trending in twitter. From Naalaya Theerpu to Bigil Vijay’s Charisma gets younger day by day.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X