பகலவன் தயாரிப்பில் புதிய குழப்பம்!

இந்தப் படத்தின் கதை - திரைக்கதை - வசனத்தை வேலூர் சிறையிலிருந்தபோது எழுதிமுடித்தார் சீமான். காட்சிகள் ஒவ்வொன்றும் விஜய்யை இலங்கைத் தமிழர்களின் பங்காளராகக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரு மாதங்களில் இந்தப் படம் ஆரம்பிக்கப்படும் என்று கூறி வந்த நிலையில், ஒரு பக்கம் தேர்தல் வந்து சீமானை அதில் பிஸியாக்கிவிட்டது. இன்னொரு பக்கம் விஜய்யும் தேர்தல் - வாய்ஸ் என புது ரூட்டில் பயணிக்க ஆரம்பித்துள்ளார். எனவே தேர்தல் முடியும்வரை இந்தப் படம் ஆரம்பிக்கப்படாது என்கிறார்கள்.
இந்த நிலையில், படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. இந்தப் படத்தை முதலில் தாணு தயாரிப்பார் என்றார்கள். ஆனால் விஜய்யோ, வேலாயுதம், 3 இடியட்ஸ் முடிந்ததும் சூப்பர் குட் பிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். சீமானோ தாணுவிடம் அட்வான்ஸ் வாங்கியுள்ளார்.
இந்தப் படங்களுக்குப் பிறகு மணிரத்னம் படத்தில் நடிக்கிறார். எனவே பகலவனை தாணு தயாரிப்பாரா, சூப்பர் குட் சவுத்ரி தயாரிப்பாரா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications











