இயக்குநர் கோகுல கிருஷ்ணா மரணம்
பிரபல இயக்குநர், வசனகர்த்தா கோகுலகிருஷ்ணா மரணமடைந்தார்.
நெல்லை மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணா. வசன கர்த்தாவாக தமிழ்த் திரையுலகில் பல காலமாக வலம் வந்தவர். பின்னர் இயக்குநராகவும் மாறினார்.
இயக்குநர் பாசிலின் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். வருஷம் 16, பூவே பூச்சூடவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்டவை அதில் சில. காசி படத்திற்கும் இவரே வசனகர்த்தா. சமீபத்தில் வந்த சாது மிரண்டால் படத்துக்கும் இவரே வசனம் எழுதியிருந்தார்.
ஆனந்தக்கும்மி, பூவரசன், முத்துக்காளை, உதவிக்கு வரலாமா உள்ளிட்ட 16 படங்களையும் இயக்கியுள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
மறைந்த கோகுலகிருஷ்ணாவுக்கு கவிதா என்ற மனைவி மட்டும் உள்ளார்.


Click it and Unblock the Notifications











