'போதை விவகாரத்தில் நடிகைகள் மாட்டியிருப்பது உண்மை உண்மை உண்மை!!'

By Chakra

ஹைதராபாத்: அரசியல் நெருக்கடிகளுக்குப் பணிவதற்கு முன், தங்களுக்குத் தெரிந்த எல்லா உண்மையையும் மீடியா மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுவது என்பதில் மகா உறுதியாய் நிற்கிறது ஹைதராபாத் போலீஸ்.

குறிப்பாக ஹைதராபாத் கமிஷனர் கான், மகா கண்டிப்பான பேரவழி. தன் வரையில் நேர்மையான அதிகாரி என்றும் பெயரெடுத்திருப்பவர். எனவே மாட்டிக் கொண்ட நடிகர் நடிகைகள் தங்களுக்கு வேண்டப்பட்ட அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள் மூலம் தரும் நெருக்கடிகளை இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதில் வெளியேற்றிவிட்டு, உண்மைகளை அம்பலமாக்கி வருகிறாராம்.

நேற்று ஹைதராபாத் மீடியாக்களிடம் பேசிய கமிஷனர் அலுவலக அதிகாரிகள், "இந்த விஷயத்தை சட்டப்பூர்வமாக அணுகும்போது எந்த அளவு உண்மை வெளிவரப் போகிறது என்பது தெரியவில்லை. எனவே அதற்கு முன் போலீஸ் தங்களுக்குத் தெரிந்த உண்மைகளை மீடியாவுக்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

பிரபலமான பல நடிகைகள், நடிகர்கள் இந்த போதை மருந்து கடத்தல் கும்பலோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது உண்மையே. இந்த குறிப்பிட்ட நடிகர், நடிகைக்கும் இந்த போதை மருந்து கும்பலிடம் தனி அக்கவுண்டே உள்ளது. தமிழ், தெலுங்கில் பிரபலமான ஒரு நடிகை மாதம் ஒரு முறை அக்கவுண்ட்டை செட்டில் செய்வது வழக்கம். இதற்கான ஆதாரத்தை கைதாகியுள்ள நைஜீரிய இளைஞர் பிரிண்ட் அவுட்டே எடுத்துக் கொடுத்துள்ளார்.

இதுவரை 28 நடிகர் நடிகைகளின் தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களில் 10 பேர் தமிழிலும் நடிக்கும் நடிகர், நடிகைகள். இவர்கள் பெரும்பாலும் போதை மருந்தை பரிமாறிக் கொள்வது கோவைக்கு அருகில்தான். இந்த போதை மருந்து கடத்தலிலும் நடிகர்களுக்கு பங்குள்ளது.
இந்தக் கடத்தலுக்கு கமிஷனாக மட்டும் ரூ. 40 லட்சம் வரை ஒரு வில்லன் நடிகர் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. விரைவில் அந்த விவரங்களை வெளியிடுவோம்..." என்று கூறியதுடன் சம்பந்தப்பட்ட நடிகர்-நடிகைகளின் லிஸ்டையும் 'ஆஃப் த ரெக்கார்டாக' கொடுத்துள்ளனர்.

ஆனால் அதை வெளியிடுவதா வேண்டாமா என்று பெரும் குழப்பத்தில் உள்ளன தெலுங்கு மீடியாக்கள். வெளியிட்ட பின்னர் நிச்சயம் போலீசார் நாங்கள் தரவில்லை என்றுதான் மறுப்பார்கள்... பின்னர் கோடம்பாக்க விபச்சார லிஸ்ட் விவகாரம் மாதிரியாகிவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையில், இன்னும் ஓரிரு நாட்கள் போகட்டும் என்று காத்திருக்கிறார்களாம்.

இதற்கிடையில், லிஸ்ட்டில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு சில நிருபர்கள் போன் செய்து, 'உங்கள் பெயர் போதை மருந்து லிஸ்டில் வெளியாகிவிட்டது', என ஏதோ ஐஏஎஸ் ரிஸல்ட் வெளியான ரேஞ்சுக்கு கூறிவருவது தனி தமாஷ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X