'கைதிகளின்' ரேம்ப் வாக்!

ரேய்னு டாண்டனின் டிசைனில் உருவான உடைகளைப் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி வில்ஸ் இந்தியா பேஷன் வாரத்தில் நடந்தது.
இதில் மதுர் பண்டர்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் கைதி உடையி்ல நடை போட்டனர்.
ஒரு சிறையில் நடக்கும் நிகழ்வுகளை அலசும் கதை இது. நவம்பர் 6ம் தேதி படம் ரிலீஸாகிறது. இதற்கான புரமோஷன் வேலைகளி்ல் பண்டர்கள் பிசியாக உள்ளார்.
இதுகுறித்து பண்டர்கர் கூறுகையில், ரேம்ப் வாக்கில் ஜெயில் படத்தை அனைவருக்கும் கண் முன் கொண்டு வர திட்டமிட்டோம். அதற்காகவே இந்த நிகழ்ச்சி. ஒரு சிறையின் சூழ்நிலையை இந்த இடத்தில் கொண்டு வந்து விட்டார் ரேய்னு என்றார்.
நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், நீல் ஆகியோர் கைதிகள் போல நடை போட்டு வந்தனர். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, ரத்தக் கறை படிந்தது போன்ற கெட்டப்பில் கைதி உடையில் நடந்து வந்தனர்.
Comments


Click it and Unblock the Notifications