சக நடிகையுடன் காதல் தோல்வி: புது ஹீரோ தற்கொலை!

By Shankar

Ajay and Sanam
சக ஹீரோயினுடன் காதல் தோல்வி ஏற்பட்டதால் மனமுடைந்த இளம் நடிகர் அஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அம்புலி என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜய். இது 3டி படமாகும். ஓர் இரவு என்ற திகில் படத்தை எடுத்த இரட்டை இயக்குனர்கள் ஹரி சங்கர் -ஹரீஷ் நாராயணன் ஆகியோர் இயக்கியுள்ள படம் இது. படப்பிடிப்பு முடிந்து அம்புலி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் அஜய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் சாவுக்கு காரணம் தெரியவில்லை.

அம்புலி படத்தில் அஜய் ஜோடியாக நடித்தவர் புதுமுக நடிகை சனம். இவரும் பெங்களூரை சேர்ந்தவர்தான். சனம் மீது அஜய் காதல் வயப்பட்டதாகவும் ஆனால் சனம் காதலை ஏற்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியுள்ளது.

போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அஜய் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.

இதுபற்றி அம்புலி படத்தின் இயக்குனர் ஹரி சங்கர் கூறுகையில், "அம்புலி படத்தை முடித்து விட்டு அஜய் பெங்களூர் சென்று விட்டார். டப்பிங் பேசும் போது அழைக்கிறோம் என்று அவரிடம் சொல்லி அனுப்பினோம். அஜய்க்கு தமிழில் பேச தெரியும். எனவே குரல் பொருத்தமாக இருந்தால் அவரையே பேச வைக்கலாம் என முடிவு செய்தோம்.

ஆனால் திடீரென்று தூக்கில் தொங்கி அஜய் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக பெங்களூர் சென்றோம். அஜய் வீட்டுக்கு போய் துக்கம் விசாரித்தோம். தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

அம்புலி படத்தில் கதாநாயகியாக நடித்த சனத்தை அஜய் காதலித்தாரா என்பதும் எங்களுக்கு தெரியாது. அஜய் பெற்றோர் எங்களிடம் விசாரித்தனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஏதேனும் சம்பவங்கள் நடந்ததா என்று கேட்டனர். 'எங்களுக்கு தெரிந்த வரை அப்படி எதுவும் இல்லை,' என்றோம்.

அஜய் இறந்ததால் அம்புலி படத்தில் அவருக்கு வேறு ஆள் வைத்து டப்பிங் பேச வைத்தோம்," என்றார்.

அம்புலி தவிர, உதிரம் என்ற படத்திலும் நடித்து வந்தார் அஜய். இதன் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. அஜய் மரணத்தால் படம் பாதியில் நிற்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X