twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சரத்-சூர்யா-விவேக் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு சம்மன்!

    |

    Vivek
    பழநி: பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பழநி, சிவகங்கை நீதிமன்றங்களில் நேற்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. டிச. 2ல் பழனி கோர்ட்டில் நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உட்பட 8 பேர் ஆஜராக வேண்டும் என, மாஜிஸ்திரேட் சரத்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல் பிரஸ் கிளப் உறுப்பினர் எம்.மதிவாணன் சார்பாக வக்கீல்கள் பி.எஸ்.கோபிநாத், எஸ்.கார்த்திக்குமார், எஸ்.சிவகுமார் பழநி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு:

    சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக அக்., 3ல் நடிகை புவனேஸ்வரி கைதானார். இதுகுறித்து அனைத்து நாளிதழ்கள், 'டிவி'க்களில் செய்தி வெளியானது.

    சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக அவர் வாக்குமூலம் அளித்தார். போலீசார் அளித்த தகவல்களின் அடிப்படையில், அந்த நடிகைகளின் பெயர்கள், அவர்களது போட்டோவுடன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

    இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் ராதாரவி அக். 5ல் தினமலருக்கு எதிராக சென்னை கமிஷனரிடம் புகார் தந்தார். இதன் எதிரொலியாக தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது செய்தனர்.பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் அவர் ரிமாண்ட் செய்யப்பட்டார்.

    இந்நிலையில் தினமலர் செய்தியை கண்டித்து நடிகர், நடிகைகளின் கண்டன கூட்டம் அக்., 7ல் விண் 'டிவி' யில் ஒளிபரப்பானது. கூட்டத்தில் நடிகர், நடிகைகள் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசியிருந்தனர்.

    பத்திரிகையாளர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியது செய்தி ஒளிபரப்பை பார்த்த போது தெரிந்தது. இதனால் வேதனை ஏற்பட்டது. உறவினர்களும், நண்பர்களும்,"பத்திரிகையாளர்கள் குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி எழுதுபவரா," என விசாரித்தனர். ஒளிபரப்பான பேச்சுக்கள் அடங்கிய 'சிடி'யையும் நடிகர், நடிகைகள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் ஐ.பி.சி.,499 பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளனர். எனவே இந்த கோர்ட் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி சட்டப்படி அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    8 நடிகர்களுக்கு சம்மன்:

    மனுவை ஏற்று கொண்ட மாஜிஸ்திரேட் சரத்ராஜ், அவதூறாகப் பேசிய சூர்யா, சரத்குமார், ஸ்ரீபிரியா, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், சேரன், விவேக் ஆகிய 8 பேரும் டிச.2-ல் பழநி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

    சிவகங்கை கோர்ட்டிலும் வழக்கு:

    இதற்கிடையே நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், சிவகங்கை பத்திரிகையாளர் சங்க உறுப்பினர் கார்த்திகேயன் மனைவி தமிழ்செல்வி வக்கீல்கள் ஏ.குமரன், ஆர்.ராஜேஷ் மூலம் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் சரவணன் தள்ளிவைத்தார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X