கவர்ச்சி நடிகை மாயா - சீதாவை ஒன்றாக விசாரிக்கும் போலீஸ்!

By Chakra

Maya and Seetha
வீட்டு வாசலில் கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையால் போலீஸில் புகார் அளித்துள்ள நடிகைகள் சீதாவையும் மாயாவையும் ஒன்றாக அமர வைத்து விசாரணை நடத்த விருகம்பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நடிகை சீதா, பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். முன்னாள் கவர்ச்சி நடிகை மாயா. கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் அத்தை இவர்.

இவர்கள் இருவரின் வீடும் சாலிகிராமம் புஷ்பா காலனியில் உள்ளது. மாயா வீட்டுக்கு அடுத்துதான் சீதாவின் வீடு உள்ளது. தன்னை மாயா அசிங்கமாக திட்டியதாக சீதா முதலில் புகார் கொடுத்தார். ரோட்டில் கார்கள் நிறுத்தப்படுவதற்கு நான் பொறுப்பு அல்ல என்றும் மாயா என்னை தினமும் ஆபாசமாக திட்டுகிறார் என்றும் மனுவில் சீதா கூறி இருந்தார். சீதா வீட்டில் சதீஷ் என்பவர் மானேஜராக இருக்கிறார். அவரும் மாயா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அரசியல்வாதிகளை வைத்து தன்னை மாயா மிரட்டுவதாகவும் சீதா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடியாக மாயாவும் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் கொடுத்தார். சீதா வீட்டுக்கு வருபவர்கள் தனது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டுச் செல்வதால் தனக்கு தொந்தரவாக உள்ளதாகவும், இதை கண்டித்தால், சீதா ஆபாசமாகத் திட்டுவதாகவும் மாயா தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாகவே சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சீதா தற்போது டி.வி. தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரிடம் கதை சொல்லவும் கால்ஷீட் கேட்கவும் நிறைய பேர் கார்களில் வருகின்றனர். அவர்களது கார்கள் மாயா வீட்டின் எதிரில் நிறுத்தப்படுவதால் இந்த தகராறு மூண்டதாக கூறப்படுகிறது.

இருவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளார். ஒரே இடத்தில் அருகருகே அவர்களை அமர வைத்து இந்த விசாரணையை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனராம். விசாரணைக்கு வருமாறு சீதா, மாயாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை இந்த விசாரணை நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X