நடிகர் ராஜன் பி தேவ் கவலைக்கிடம்!

பிரபல வில்லன்-குணச்சித்ர நடிகர் ராஜன் பி.தேவ், ரத்த வாந்தி எடுத்தார். ஆஸ்பத்திரியில், அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தமிழில் சூரியன் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து லவ்டுடே, குஷி, சமீபத்தில் வெளியான கார்த்திக் அனிதா வரை ஏராளமான படங்களில் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் ராஜன் பிதேவ்.
இவர், நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் படங்களில் நடிக்காமல், கேரளாவில் அங்கமலி அருகே உள்ள தனது சொந்த கிராமத்தில் ஓய்வெடுத்து வந்தார்.
திடீரென்று அவர் ரத்த வாந்தி எடுத்தார். உடனடியாக அவரை எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது, அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
ராஜன் பி.தேவை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனாலும் அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











