தெலுங்கானா: நாயுடுவுக்கு விஜயசாந்தி கண்டனம்

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த தேர்தலில் தனி தெலுங்கானா அமைப்போம் என்று கூறித்தான் தேர்தலைச் சந்தித்தது. தேர்தலுக்கு பிறகு தோல்வி அடைந்ததால் தெலுங்கானா பிரச்சினையைக் கைவிட முடிவு செய்துள்ளதாக இப்போது அறிவித்துள்ளனர் அக்கட்சியினர்.
தெலுங்கு தேசம் கட்சி தன் சுய லாபத்துக்காக செயல்படுவது இதிலிருந்தே தெளிவாகிறது. சந்திரபாபு நாயுடு தனது சுய லாபத்துக்காக கட்சியை நடத்துகிறார். தனி தெலுங்கானா விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் சந்திரபாபு நாயுடுவை தெலுங்கானா பகுதி மக்கள் மன்னிக்கமாட்டார்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். உள்ளாட்சித் தேர்தல்களை சரியான கூட்டணியோடு சந்திப்போம், என்று விஜயசாந்தி கூறினார்.


Click it and Unblock the Notifications











