Just In
- 2 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 3 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 3 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 5 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Automobiles
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அகிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை: 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய்.
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான S.A. சந்திரசேகர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பிரபல பாடகி ஆவார்.
இப்படி சினிமா பின்புலத்தை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும் விஜய் நிறைய அவமானங்களை கடந்து வந்து தான் வெற்றி அடைந்தார். விஜய்யின் 28 வருட சினிமா வாழ்க்கை பற்றிய சிறிய செய்தி தொகுப்பு.

விடா முயற்சியால் மீண்டெழுந்தார்
ஆரம்ப காலத்தில் நாளைய தீர்ப்பில் தொடங்கி நிறைய தோல்விகளையே சந்தித்து வந்தார் விஜய். எந்த படமும் பெரிதாக பேசப்படாமல் விஜய்க்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் வகையில் பூவே உனக்காக படத்தில் தனது முதல் பெரிய வெற்றியை ருசித்தார் விஜய். அதன் பிறகு லவ் டுடே, ஒன்ஸ் மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமுடன், மின்சார கண்ணா என வெற்றி படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

முழு மனதாக ஏற்றுக் கொண்ட மக்கள்
காதல் படங்களில் நடித்து வந்த இளைய தளபதி பகவதி படத்தில் முழு ஆக்ஷன் ஹீரோவாக அவதரித்தார். அதன் பின்னர் திருமலை, கில்லி, மதுர, ஆதி, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என ஆக்ஷன் ஹீரோவாக அசத்தி பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை பிடிக்க தொடங்கினார். குறிப்பாக இதில் கில்லி, போக்கிரி ஆகிய படங்கள் விஜய்யின் படங்களில் ரசிகர்களிடத்தில் பெரிதும் பேசப்பட்ட படமாகும்.

தளபதி விஜய்யின் எழுச்சி
2007 - 2010 வருடங்களில் விஜய்யின் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக சோபிக்காமல் போக, பின்னர் திரையரங்க உரிமையாளர்கள் விஜய்யின் படங்களை திரையிட மறுக்க, பலர் ஃபீல்டு அவுட் என முத்திரை குத்தினர். இதையெல்லாம் கண்டு துவண்டு போகாமல் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தின் மூலம் வேறு ஒரு அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் பலராலும் பேசப்பட்டு, புகழப்பட்டு அசைக்க முடியாத ரசிகர் பட்டாளத்தை பெற்று தென்னிந்தியாவில் மிக சிறந்த நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார் தளபதி விஜய். அப்போது விஜய்யின் படத்தினை திரையிட மறுத்த திரையரங்க உரிமையாளர்களை இன்று தளபதி விஜய்யின் படத்தினால் (மாஸ்டர்) மட்டுமே மக்களை திரையரங்கிற்கு மீட்டு கொண்டு வர முடியும் என கூற வைத்துள்ளார். இதை விட விஜய்யின் வெற்றிக்கு வேறு எந்த எடுத்துக்காட்டும் தேவைப்படாது.

அண்ணன் யாரு? தளபதி!!
தமிழ் சினிமாவில் 28 ஆம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் தளபதி விஜய்யை திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்தியும்,CDP வெளியிட்டும் கொண்டாடி வருகின்றனர். #28YearsOfBelovedVijay என்ற ஹாஸ்டேக் அகிலமெங்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த 28 வருட சினிமா வாழ்க்கையில் மக்களை மகிழ்வித்த தளபதி விஜய்க்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் கூறுவதில் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பெருமை கொள்கிரார்கள்.