தல போல வருமா.. விக்னேஷ் சிவன், பூனம், பிரசன்னா என பிரபலங்கள் வெளியிட்ட #28YrsOfAjithismCDPBlast
சென்னை: நடிகர் அஜித் சினிமா வாழ்வில் அடியெடுத்து வைத்து 28 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக #28YrsOfAjithismCDPBlast என்ற ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தல அஜித்தின் 28 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக தற்போது வெளியாகியுள்ள சிறப்பான காமன் டிபியை பல பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை பூனம் பஜ்வா, நடிகர் பிரசன்னா, பிரேம்ஜி, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என அந்த பிரபலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தல அஜித்
வாரிசு நடிகராக இல்லாமல், தமிழ் சினிமாவில் பெரிய சப்போர்ட் இல்லாமல் காலடி எடுத்து வைத்து, தற்போது தனக்கென்ற ஒரு தனி ரசிகர் வட்டத்தையே உருவாக்கி வைத்துக் கொண்டு ‘தல' யாக மாறியுள்ளார் நடிகர் அஜித். இந்த 28 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில், எண்ணற்ற பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து கோலிவிட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக கெத்து காட்டி வருகிறார்.

அதாரு காட்டும் ரசிகர்கள்
நடிகர் அஜித்தின் 28 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் #28YrsOfAjithismCDPBlast என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, அதாரு காட்டி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். தற்போது வெளியாகி இருக்கும் காமன் டிபியை பல சினிமா பிரபலங்கள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ளனர். அதன் டிசைன் தெறிக்கவிடுகிறது.

டாப் பிரபலங்கள்
தல அஜித்தின் 28வது ஆண்டு சினிமா கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் தற்போது வெளியாகி உள்ள காமன் டிபியை தமிழ்நாட்டின் டாப் பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளனர். விக்னேஷ் சிவன், பிரசன்னா, பூனம் பஜ்வா, பார்வதி நாயர், ஆரத்தி, பிரேம்ஜி, எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், மகத், ராகுல் தேவ், நந்திதா, நிக்கி கல்ராணி, டிடி, பிந்து மாதவி, மோகன் ஜி உள்ளிட்ட பலர் வெளியிட்டுள்ளனர்.

விஷப்பாம்புகளுக்கு நடுவே
விஷம் நிறைந்த கருநாக பாம்புகளுக்கு மத்தியில், நெருப்பு சூழ் உலகில், தனி ஒருவனாக கெத்துக் காட்டும் தல அஜித்தாக அந்த காமன் டிபி அட்டகாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை வெளியிட்டு, இதை வெளியிடுவதில் ரொம்ப ஹேப்பி எனக் கூறியுள்ளார். மற்ற பிரபலங்களும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











