என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுக்கு அமிதாப் 'சல்யூட்'!

இதுகுறித்து தனது பிளாக்கில் அமிதாப்பச்சன் எழுதியிருப்பதாவது..
என்.எஸ்.ஜி. கமாண்டோக்களே, பாதுகாப்புப் படையினரே, நீங்கள்தான் உண்மையான ஹீரோக்கள். இது (மும்பை) உங்களது நகரமல்ல, இது உங்களது நிலமல்ல, ஆனால் இது உங்களது நாடு.
இந்தியர்களாக இங்கு வந்தீர்கள். இந்தியக் குடிமக்கள் என்ற பெருமையை நாம் உணரும்படி செயல்பட்டுள்ளீர்கள்.
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை, எந்த சத்தமும் இல்லை. ஒரு கட்டுக்கோப்பான, கட்டுப்பாடான ராணுவத்தின் அங்கமாக, தேசபக்தியுடன் நீங்கள் செயல்பட்ட விதம் உங்களை நோக்கி என்னை சல்யூட் செய்ய வைக்கிறது என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
Comments


Click it and Unblock the Notifications