வடிவேலு மீது ஏன் வழக்கு பதிவு போடவில்லை: அரசுக்கு நோட்டீஸ்

இதுகுறித்து விஜயகாந்த்தின் மேலாளர் சதீஷ் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கடந்த ஆண்டு எனக்கும், வடிவேலு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் கொடுத்தனர். அதில், வடிவேலு தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் மனு மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடு்க்கப்படவி்ல்லை.
வடிவேலு மீதான புகாரைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை இன்று விசாரித்த நீதிமன்றம், வடிவேலு மீது சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பது குறித்து நவம்பர் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications