செக் மோசடி: கந்தா பட தயாரிப்பாளர் மனைவிக்கு பிடிவாரண்ட்!
சென்னை: கந்தா என்ற படத்தைத் தயாரித்த பழனிவேல் என்பவரின் மனைவிக்கு எதிராக தொடரப்பட்ட செக் மோசடி வழக்கில், அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த பைனான்சியர் மோகன்குமார். பைனான்சியர். இவர் 'கந்தா' பட தயாரிப்பாளர் பழனிவேலின் மனைவி கல்பனாவுக்கு எதிராக சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், "ஹைடெக் புராபர்டி உரிமையாளர் கல்பனா கடந்த 2009-ம் ஆண்டு ரூ. 20 லட்சம் என்னிடம் கடன் வாங்கினார். பின்னர் அவர் கொடுத்த செக்கை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்தது.
இதுபற்றி அவருக்கு வக்கீல் மூலம் நோட்டீசு அனுப்பி தெரியப்படுத்தினேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. பணத்தையும் கொடுக்கவில்லை. எனவே கல்பனாவை செக் மோசடி சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு ஜார்ஜ் டவுன் 8-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது கல்பனா கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மார்ச் 20-ம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











