பாலாவுக்கு எதிராக போலீஸில் புகார்

இச்சங்கத்தின் தலைவர் வரதா குட்டி இதுதொடர்பாக சென்னை போலீஸில் கொடுத்துள்ள புகாரில், நான் கடவுள் படத்தில் உடல் ஊனமுற்றோரை மிகவும் மோசமாக சித்தரித்துள்ளார் இயக்குநர் பாலா.
உடல் ஊனமுற்றோரால் பிச்சை எடுத்து மட்டுமே பிழைக்க முடியும் என்ற தவறான கருத்தை அவர் பிரதிபலித்துள்ளார். மேலும், இப்படத்தில் வரும் ஊனமுற்ற கேரக்டர்கள் அனைத்தும் சித்திரவைத்துக்குள்ளாவது போலவும், ஒரு பார்வையற்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்யப்படுவதையும் சித்தரித்துள்ளனர்.
எனவே இப்படி தவறான முறையில் ஊனமுற்றவர்களை சித்தரித்த இயக்குநர் பாலாவைக் கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸார் புகாரைப் பெற்றுக் கொண்டதாக ரசீது கொடுத்துள்ளனர். விரைவில் மேல் நடவடிக்கை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
ஊனமுற்றோர் சங்கம் சினிமா தமிழ் நான் கடவுள் பாலா புகார் bala cinema complaint naan kadavul tamilnadu physically handicapped welfare association


Click it and Unblock the Notifications