அமீருக்கு நோட்டீஸ்!

இந்தப் படத்தின் 7 ஏரியா உரிமைக்கு இன்னும் அமீர் பணம் தரவேண்டும் என்று கோரி, கோர்ட்டுக்குப் போயிருக்கிறார் ஸ்டுடியோ கிரீன் நிறுவன உரிமையாளர் ஞானவேல்ராஜா.
இந்தப் படத்துக்கு இன்னும் தனது சம்பள பாக்கி நிலுவையில் இருப்பதாக அமீர் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
பருத்தி வீரன் என்ற ஒரே படத்தில் கார்த்தி என்ற புதுமுகம் சூப்பர் ஆக்ஷன் நாயகனாக மாறிவிட்டார். ஆனாலும் அமீருக்கு பிரச்சினைகள் தொடர்கின்றன.
தனக்கு அமீர் ரூ.1.53 கோடி பாக்கி தரவேண்டும் என்றும் அதைத் தராமல் அமீர் முதல்முறையாக நாயகனாக நடித்து வெளிவந்துள்ள யோகி படத்தை திரையிட விடக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார் ஞானவேல் ராஜா.
இதுகுறித்த மனுவில், "7 மாவட்டங்களுக்கு 'பருத்திவீரன்' படத்தின் விநியோக உரிமை அமீருக்கு வழங்கப்பட்டது என்றும், இதுதொடர்பாக ரூ.1 கோடியே 53 லட்சத்தை எனக்கு அவர் தரவேண்டியுள்ளது என்றும் மனுவில் கூறியிருந்தார். ரூ.1 கோடியை டெபாசிட் செய்யாமல் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது" என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி ராஜசூரியா நேற்று விசாரித்தார். இந்த மனு மீண்டும் வருகிற புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதுபற்றி பதில் தருமாறு அமீருக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications