88 வயது முதிய முன்னாள் நடிகருக்கு ஜெ உதவி!

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 88 வயதுடைய பெரியவர் கணேச நாடார், தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும், முதுமையின் காரணமாக உழைக்க முடியாமல் வறுமையில் வாடுவதாகவும் தெரிவித்து, தனக்கு உதவி செய்ய வேண்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து கணேச நாடாரை ஜெயலலிதா தமது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து, அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ரூ.10,000 வழங்கியதோடு, எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து மாதா மாதம் ரூ.1,500 வழங்கவும் உத்தரவிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications