பழஸிராஜா பார்த்த கருணாநிதி!

பழஸிராஜாவின் தமிழ்ப் பதிப்பு விரைவில் தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த தமிழ்ப் பதிப்பைத்தான் நேற்று முதல்வருக்கு திரையிட்டுக் காட்டினார்கள் தயாரிப்பாளர் கோகுலம் பிரவீண்.
படம் பார்த்த கருணாநிதி, "மிகச் சிறப்பாக இந்தக் கதையைக் கையாண்டுள்ளதாகவும், இயக்குநர் ஹரிஹரன், மம்முட்டி மற்றும் சரத் குமாருக்கு இந்தப் படத்தின் வெற்றியில் கணிசமான பங்கிருப்பதாகவும் கருணாநிதி கூறினார்.
இதுபோன்ற படங்களை தொடர்ந்து தர வேண்டும் என்று பாராட்டினார் கருணாநிதி. தமிழில் வரும் நவம்பர் 13ம் தேதி வெளியாக உள்ளது பழஸிராஜா.
கருணாநிதிக்கு மருத்துவ சோதனை:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று வழக்கமான பரிசோதனை நடந்தது.
உடல் பரிசோதனைக்குப் பின் அங்கு ஓய்வு எடுத்தார்.
Comments


Click it and Unblock the Notifications