புகை பிடிக்கும் காட்சியில் நடித்த 2 மலையாள நடிகர்கள் மீது வழக்கு

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் டாக்குமெண்டரி, கல்வி, சுகாதார விழி்ப்புணர்வு படங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவி்ல் சமீபத்தில் சிபி்மலையில் இயக்கிய அபூர்வராகம் என்ற மலையாள படம் வெளியானது. இதில் கதாநாயகன் நிஷான், கதாநாயகியின் தந்தை ராஜா ஆகியோர் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த படத்தை பார்த்த கொச்சி போலீசார் அந்த காட்சிகளை கேமராவில் படம் பிடித்தனர். அதை தொடர்ந்து நிஷான், ராஜா மீது புகையிலை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2 நடிகர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது.
Comments
புகைபிடிக்கும் காட்சி போலீஸ் வழக்குப் பதிவு மலையாளம் நடிகர்கள் malayalam actors police slaps case smoking scene


Click it and Unblock the Notifications