அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மனோரமா தேறி வருகிறார்.

மனோரமாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட அவர் கேரளாவுக்குச் சென்று ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அது பலன் தரவில்லை.
இதையடுத்து சென்னை திரும்பிய அவர் பிரபல தனியார் மருத்துமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அவருக்கு நினைவு திரும்பியது. தெளிவான நிலையி்ல் அவர் இருக்கிறார். குடும்பத்தினர், உறவினர்களிடம் பேசினார்.
அவரது உடல் நலம் தற்போது தேறி வருவதாகவும், நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications