'ஆஸ்கர்' .. பெனகல் பாய்ச்சல்!

கோவா தலைநகர் பனாஜியில், நான்கு நாள் தெற்காசிய திரைப்பட விழா நடந்தது. இன்று அது முடிவடைந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஷியாம் பெனகல் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது இந்திய சினிமா, ஆஸ்கர் விருது பெறும் அளவுக்கு தகுதி பெறவில்லையா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பெனகல் பதிலளிக்கையில், ஆஸ்கர் விருதில் பெரிதாக எதுவும் இல்லை. அதில் அப்படி என்ன விசேஷமாக இருக்கிறது? மேற்கத்திய நாடுகளுக்கு அது பெரிய விருதாக இருக்கலாம். நமக்கு அது ஒன்றும் இல்லை.
மேற்கத்திய நாடுகளை விட நமது கலாச்சாரம் பெரிது. அவர்களை விட நமது நாட்டில் ஏராளமான கலாச்சாரங்கள் உள்ளன. அதேபோல அவர்களது சினிமாவை விட நமது சினிமா பெரியது, ஆஸ்கருடன் ஒப்பிடுகையில், நமது சினிமா பெரியது.
நமது கலாச்சாரம், நமது மொழிகள், நமது கருத்துக்களை மேற்கத்திய மக்கள் புரிந்து கொள்வது மிகக் கடினம். அவர்களுக்குப் புரியவும் புரியாது.
நமது சினிமாவின் தரத்தையும், நமது தயாரிப்புகளையும் நாம்தான் ஜட்ஜ் பண்ண வேண்டும். மேற்கத்திய கோணத்தில் நமது திரைப்படங்களைப் பார்க்கக் கூடாது.
ஆண்டுதோறும் 16 முதல் 18 சதவீதம் வரை இந்தியா சினிமா வளர்ந்து கொண்டுதான் உள்ளது. ஹாலிவுட் உள்ளிட்ட உலக சினிமாவில் நமது
சினிமாவின் வளர்ச்சிதான் மிகப் பெரியது என்றார் பெனகல்.
ஏற்கனவே கமல்ஹாசன், ஆஸ்கர் விருதுகளை 'வாங்கு வாங்கென்று வாங்கி' வருகிறார். இந்த வரிசையில் இப்போது ஷியாம் பெனகலும் இணைந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











