மாதம் ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் - பிரகாஷ் ராஜ் மனைவி கோரிக்கை

By Staff

Prakash Raj with Wife Lalitha kumari
மனைவியிடம் விவாகரத்து கேட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு முடியும்வரை மாதம் ரூ.2 லட்சம் வீதம் பிரகாஷ்ராஜ் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று அவரது மனைவி லலிதகுமாரி நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகர் ஆனந்தனின் மகளும், நடிகையுமான லலிதாகுமாரிக்கும், பிரகாஷ்ராஜுக்கும் திருமணம் நடந்தது. நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கைதான் லலிதாகுமாரி ஆவார்.

நல்ல தம்பதிகளாக வெளியுலகுக்குத் தெரிந்தாலும், இருவருக்குமிடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

இருவரும் பரஸ்பர சம்மதத்தோடு பிரிந்துவிடலாம் என பிரகாஷ்ராஜ் வற்புறுத்தியதாகவும், அதற்கு லலிதகுமாரி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே லலிதாகுமாரியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டுமென்று பிரகாஷ்ராஜ் குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை சென்னை முதலாவது குடும்பநல நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஆனால் லலிதாகுமாரி கணவருடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்று மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி ராமலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பிரகாஷ்ராஜும், லலிதாகுமாரியும் நேற்று நீதிமன்றத்துக்கு வந்தனர்.

நீதிமன்ற ஆலோசனை மையம் முன்பு இருவரும் ஆஜரானார்கள். மைய உறுப்பினர்கள் இருவரிடமும் நீண்டநேரம் விசாரணை செய்து சமாதானம் செய்ய முயன்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் இந்த வழக்கில் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

எனவே, மீண்டும் இவர்களிடத்தில் ஆலோனைகளை கூறி சமரசம் ஏற்படுத்தி வைப்பதற்காக இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

'2 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும்'

இந்நிலையில், நேற்று லலிதாகுமாரி மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் தனது கணவரிடமிருந்து மாதம் ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் கேட்டிருந்தார் லலிதகுமாரி. தனது மனுவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

எனது கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், நான் வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனது 2 பெண் குழந்தைகளையும் நான்தான் கவனித்து வருகிறேன். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும், கல்வி செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது. எனது கணவர் பிரகாஷ்ராஜ் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்.

எனவே இந்த வழக்கு முடியும்வரை எனக்கும், எனது 2 பெண் குழந்தைகளுக்கும் மாதம் சுமார் ரூ.2 லட்சம் வீதம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மாதம் தனக்கு ஆகும் செலவு விபரங்களைப் பட்டியல் போட்டும் அவர் கொடுத்துள்ளார். இந்த மனு செப்டம்பர் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X