மீண்டும் அரசியலில் ராதிகா-சரத்துக்குப் பதில்....

By Staff

Radhika, Sarathkumar and kamal
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்கச் செல்லும் அனைத்துக் கட்சிக் குழுவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் சரத்குமாருக்குப் பதில் அவரது மனைவி ராதிகா சரத்குமார் பங்கேற்பார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

டிசம்பர் 4ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில், அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, இலங்கையி்ல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளது.

இந்தக் குழுவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இக்குழுவில் கட்சி சார்பில் சரத்குமாருக்குப் பதில் அவரது மனைவி ராதிகா கலந்து கொள்வார் என சமத்துவ மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

சரத்குமார் தற்போது படப்பிடிப்புக்காக மலேசியா போயுள்ளார். எனவே அவரால் பங்கேற்க முடியாது என்பதால் அவருக்குப் பதில் ராதிகா செல்லவிருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

முன்பு திமுகவில் இருந்த ராதிகா அந்தக் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார். பின்னர் அரசியலை விட்டு விலகிவிட்டார். இந் நிலையில் அவரது கணவரின் கட்சியில் அவருக்கு முக்கிய பதவி வழங்கப்படவுள்ளது. இதன் முன்னோட்டமாகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராதிகாவை இடம் பெறச் செய்துள்ளார் சரத்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X