ராஜன் பி தேவ் மரணம்!

நீரிழிவு நோயாளியான அவர் உடல் நலம் இல்லாமல் சில தினங்களாக தனது கிராமமான அங்கமல்லியில் ஓய்வில் இருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு ரத்த வாந்தி மற்றும் சுகவீனம் ஏற்பட்டது.
இதனால் அவர் கொச்சியில் லக்ஷோர் மருத்துவமனையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். ஆனாலும் அவர் அபாய கட்டத்தைத் தாண்டாமல் நினைவிழந்த நிலையில் இருந்தார்.
இன்று காலை அவர் நினைவு திரும்பாமலேயே அவர் உயிர் பிரிந்தது.
அவரது இந்த திடீர் மறைவு, மலையாள - தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
'சூரியன்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ராஜன் பி தேவ். பின்னர் ஜென்டில்மேன், லவ்டுடே, குஷி, பெரிய இடத்து மாப்பிள்ளை, ஆனந்தப் பூங்காற்றே என பெரும்பாலான வெற்றிப் படங்களில் அவரது பாத்திரம் முக்கியப் பங்கு வகித்தது.
வில்லனாக மட்டுமின்றி அருமையான குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தார். சில படங்களில் அவர் நடித்த நகைச்சுவை வேடங்கள் ரசிகர்களுக்கு பெரும் மாறுதலாக அமைந்தன.
1983-ம் ஆண்டிலிருந்து நடிக்கும் நடித்துவரும் ராஜன் பி தேவ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் 520க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவருக்கு சாந்தா என்ற மனைவியும், ஆஷாம்மா என்ற மகளும் ஜிபில் ராஜ் என்ற மகனும் உள்ளனர்.
மறைந்த ராஜன் பி தேவின் இறுதிச் சடங்கு நாளை நடக்கிறது.


Click it and Unblock the Notifications











