எம்ஜிஆர் பட நாயகிகள் கூடும் திரைப்படக் கண்காட்சி

இந்த விழா இன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது.
பகல் 2 மணிக்கு எம்.ஜி.ஆர்.75 திரைப்பட கண்காட்சி நடக்கிறது. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் இருந்து 500 புகைப்படங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்படுகின்றன. மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு எம்.ஜி.ஆருடன் நடித்த கே.ஆர். விஜயா, வைஜெயந்தி மாலா, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, சி.ஐ.டி. சகுந்தலா, ராஜஸ்ரீ போன்றோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
புலவர் புலமைபித்தன், எஸ்.எஸ். ராஜேந்திரன், பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, வாணி ஜெயராம், எம்.எஸ். விஸ்வநாதன், முக்தா சீனிவாசன், ஜெயந்தி கண்ணப்பன், எஸ்.பி. முத்துராமன் ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications