'டார்ஜானுக்கு' கத்திக்குத்து!

பாலிவுட் நடிகரும், இந்திய டார்ஜான் என புகழப்படுபவருமான ஹேமந்த் பிர்ஜேவை, அவரது நண்பர் அர்ஜூன் ஆர்யா என்கிற அலி கான் சரமாரியாக அடித்து உதைத்தார்.
மும்பை புறநகரான ஓஷிவாரா பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. டார்ஜான் படத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் பிர்ஜே. இதையடுத்து இவருக்கு இந்திய டார்ஜான் என்ற செல்லப் பெயரும் ஏற்பட்டது. இவரும் ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆர்யாவை, பிர்ஜே திட்டி அவமதித்ததாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த ஆர்யா, நேற்று இரவு பிர்ஜேவை சரமாரியாக உதைத்து, கத்தியால் குத்தினார். இதில் பிர்ஜேவுக்கு காயம் ஏற்பட்டது.
போலீஸார் ஆர்யா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











