29 Twitter Review: 29 படத்தின் டிவிட்டர் ரிவியூவ்.. லவ் ஸ்டோரியா? இல்லை ஜவ்வு ஸ்டோரியா?

சென்னை: இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி உள்ள படம் 29. படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் என இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என்று எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அவை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ரசிகர் ஒருவர், " 29 படம் ரொம்பவே நன்றாக உள்ளது. 2010 காலகட்டத்தில் நடக்கும் காதல் கதையை இந்த படம் பிரதிபலிக்கிறது. காட்சிகளும் வசனங்களும் இயக்குநர் ரத்னகுமாரின் முந்தைய படங்களை அப்படியே வெளிக்காட்டுகிறது. படத்திற்கு மற்றொரு பலம் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தான். பல காட்சிகளை அவர் மிகவும் அழகாக எலிவேட் செய்து கொடுத்துள்ளார். மனதில் நிற்கும் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவரோ, படம் நன்றாக இருக்கிறது, படத்தில் குறைகள் இருந்தாலும் ஒரு திருப்தியான படம் பார்த்த எண்ணத்தைக் கொடுக்கிறது. மீண்டும் ஒரு ஃபீல் குட் படம். இயக்குநர் ரத்ன குமார் தான் ஆசைப்பட்ட விதத்தில் படத்தின் திரைக்கதையை அமைத்து படத்தைக் கொடுத்துள்ளார். ப்ரீத்தி அஸ்ரானிக்கு இந்த படம் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். கதாநாயகன் விதுவும் சிறப்பாகவே நடித்துள்ளார். ஒரு அழகான நகைச்சுவை கலந்த காதல் கதை" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொருவரோ, இணையம் இவ்வளவு வளர்வதற்கு முன்னர் 29 வயது ஆணுக்கும் 21 வயது பெண்ணுக்கும் உள்ள காதல் கதையை ரத்னகுமார் 2010ஆம் ஆண்டுக்கே சென்று நமக்கு காட்டி உள்ளார். இது மட்டும் இல்லாமல் நமது கடந்த காலத்தையும் அழகாக திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஒரு அழகான காதல் கதை மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, முழுக்க முழுக்க ரொமான்ஸ், நகைச்சுவை என ரத்னகுமார் படம் முழுக்க சின்ன சின்ன நுணுக்கங்கள் வரை பார்த்து பார்த்து திரைக்கதை அமைத்துள்ளார்" என்று விமர்சித்துள்ளார்.

29 Twitter Review A Beautiful Love Story or a Slow Romantic Drama

படம் பார்த்த பெரும்பான்மையானவர்கள் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருவதால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சில் உள்ளது. தேர்தல் பரபரப்பிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வரும் காலத்தில் வசூலும் படத்திற்கு திருப்திகரமானதாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X