twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யாவின் அத்தனை கஷ்டத்தையும் கட் பண்ணிருக்காங்களே.. வரிசையாக வெளியாகும் நீக்கப்பட்ட காட்சிகள்!

    |

    சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று 100 நாட்களை கடந்து அமேசான் பிரைமில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில், சூரரைப் போற்று திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை வரிசையாக 2டி நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!

    இதுவரை 4 டெலிடட் சீன்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

    மாடு போல

    சூரரைப் போற்று திரைப்படத்தில் மாறாவாகவே சூர்யா வாழ்ந்தது இந்த நீக்கப்பட்ட காட்சிகளை பார்த்தாலே இன்னும் நன்றாகவே புரியும். அந்த அளவுக்கு சூர்யா ஒவ்வொரு காட்சியிலும் கடும் உழைப்பை கொட்டி உள்ளார். முதல் டெலிடட் காட்சியில் பேக்கரியில் வெயிட்டராகவும், ஏறுகளை பூட்டி மாடு போல உழுதும் வியக்க வைக்கிறார்.

    அன்னமயிலு வேண்டாம்

    பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி சூர்யாவின் லட்சியம் நிறைவேறாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கிளம்பும் நிலையில், அடுத்ததாக அன்னமயிலு எனும் பெண்ணை ஊர்வசி பார்த்த விசயத்தை தொலைபேசியில் பேசும் காட்சியை இரண்டாவது டெலிடட் சீனில் வெளியிட்டுள்ளனர்.

    மதுரை திமிரு

    சூரரைப் போற்று படத்தில் மதுரைக் கார பெண்ணாக அபர்ணா பாலமுரளி அட்டகாச நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது வெளியாகி உள்ள இந்த நீக்கப்பட்ட காட்சியில், சூர்யாவுக்கு கடன் கொடுத்த அறிவு அபர்ணாவை வைத்துக் கொண்டு மிரட்ட, பதிலுக்கு அபர்ணா எதிர்த்து பேசும் காட்சிகள் பட்டாசாக உள்ளன.

    லஞ்சம் கேக்குறாங்க

    மாறாவின் நெருங்கிய நண்பன் லைசென்ஸ் வாங்கிட்டியா என கேட்க, லஞ்சம் கேட்கிறாங்க டா என சூர்யா புலம்பும் மற்றுமொரு கூஸ் பம்ப்ஸ் காட்சியையும் பாரபட்சம் பார்க்காமல் படத்தில் இருந்து வெட்டி தூக்கி எறிந்துள்ளனர். இன்னும் எத்தனை அற்புதமான காட்சிகளை இப்படி நீக்கியிருக்கீங்க என ரசிகர்கள் ஒரு புறம் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

    தம்மடிக்கிற சீன்

    தம்மடிக்கிற சீன்

    இத்தனை அன்சீன்கள் வெளியானலும் இன்னமும் டீசரில் இடம்பெற்ற அந்த தம் அடிக்கும் காட்சியை காணவே ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அது எப்போ வரும், சீக்கிரம் அந்த டெலிடட் சீனை போடுங்க என 2டி நிறுவனத்துக்கு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். ஒவ்வொரு நீக்கப்பட்ட காட்சிக்கு பின்னாலும் எத்தனை உழைப்பு இருக்கு, இதையெல்லாம் சேர்த்து வைத்தால், இன்னொரு படமே உருவாகி விடும் போல என்றும் கூறி வருகின்றனர்.

    English summary
    2d entertainment continuosly released Soorarai Pottru movie deleted scenes and wondering how Suriya performances in each and every frame in deleted scene also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X