"2K லவ் ஸ்டோரி" டிரெய்லர் வெளியீட்டு விழா !!
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ் ஸ்டோரி". Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.
வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்...
இயக்குநர் நடிகர் பாக்யராஜ் கண்ணன் பேசியதாவது..,
2K கிட்ஸ் படத்தில், நான் 90 கிட்ஸாக நடித்துள்ளேன். சுசி சார் போன் செய்து பிரதர் ஃப்ரீயா எனக்கேட்டார், நடிக்க வரலாமே என்றார். என்னை நம்பி கூப்பிடுகிறாரே என உடனே நடிக்கப் போய் விட்டேன். அவ்வளவு அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்திற்கு ஆபிஸே போடவில்லை, என்னை ஜூடியோவிற்கு கூப்பிட்டு, அங்கு தான் டெஸ்ட் எடுத்தார் இயக்குநர். படம் முழுக்க ஃபன்னாக இருந்தது. விக்னேஷ் பிரதர் இவ்வளவு பெரிய படத்தை, நல்ல கதையை நம்பி எடுத்துள்ளார். நன்றி. இந்தப்படம் தனஞ்செயன் சார் கைக்குப் போய் விட்டது என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. சுசி சார் எதோ குளத்து வேலைக்கு ஆள் பிடிப்பது போல், ஆட்களைக்கூட்டிப்போய் காலை 6 மணிக்கெல்லாம் ஷாட் வைப்பார். பிரேக் பாஸ்ட்டுக்கு முன்னால் ஒரு சீனை முடித்து விடுவார், அதற்குக் காரணம் ஒளிப்பதிவாளர் ஆனந்த் பிரதர் தான். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். பிப்ரவரி 14 ஆம் தேதி படம் வருகிறது. எல்லோரும் லவ்வரோடு போய்ப் படம் பாருங்கள் நன்றி.
நடிகர் பாலசரவணன் பேசியதாவது...
எனக்கு இந்த அருமையான படத்தில் வாய்ப்பு தந்த, சுசீந்திரன் சாருக்கு நன்றி. இந்தப்படம் பார்த்து, அத்தனை வேலைகளுக்கு மத்தியில் என்னை அழைத்துப் பாராட்டிய இமான் சாருக்கு நன்றி. 2கே கிட் படத்தில் எனக்கு என்ன வேலை என என் வீட்டிலும் கேட்டார்கள், நான் 2கே கிட்டாக நடிக்கிறேன் என சொல்லவே இல்லை. இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமென நான் நினைக்கவே இல்லை. சுசீந்திரன் சாருக்கு நன்றி. தனஞ்செயன் சார் படத்தை வெளியிடுகிறார் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. நாயகன் ஜெகவீர் மிக ஆதரவாக இருந்தார். இப்படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். மீனாட்சி மிக நன்றாக நடித்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை திவ்யா துரைசாமி பேசியதாவது....
என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசி சார் தான். அவருக்காகத் தான் இந்த விழாவிற்கு வந்தேன். எதற்காகவும் கோபப்பட மாட்டார், மிகவும் அன்பாக இருப்பார். எப்போதும் ஒரே மாதிரி இருப்பார். அவரது இந்தப்படம் டிரெய்லர் பார்க்கவே அற்புதமாக இருக்கிறது. புதிய ஹீரோ அறிமுகமாகியுள்ளார் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் இமான் பேசியதாவது..,
City light pictures க்கு இந்தப்படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். சுசி சாரின் நல்ல மனதிற்கும், புதிய முயற்சிக்கும் இப்படம் பெரிய வெற்றி பெறும். சுசி சாருடன் இது எனக்கு 9வது படம். ஒரு இயக்குநருடன் நான் தொடர்ந்து படங்கள் செய்வேன் ஆனால் அது ஒரே மாதிரி படமாகத்தான் இருக்கும், ஆனால் சுசி சார் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜானரில் அசத்துவார். இந்தப்படத்தில் 2கே கிட்ஸ் உலகத்தை மிக இயல்பாக அழகாகக் காட்டியுள்ளார். எல்லோரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும். இந்த தலைமுறை இளைஞர்களிடம் உரையாடி, அவர்களின் உலகைக் காட்சிப்படுத்தியுள்ளார். கேமரா மிக உயர்தரமாகக் காட்சிகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. விஷுவல் நன்றாக இருக்கும் போது தான், இசையும் நன்றாக வரும். பாடல்கள் மிக இளமையாக வந்துள்ளது. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவிற்கு என் நன்றி. இப்படத்தின் இசை முதல் முறையாக என் ஆடியோ லேபிள் நிறுவனம் மூலம் வருகிறது மகிழ்ச்சி. இப்படத்தைப் பார்த்து விநியோகிக்க வந்துள்ள தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஜெகவீர் மீனாட்சி மிக நன்றாக நடித்துள்ளனர். அனைவரும் மிக இயல்பாக நடித்துள்ளனர். பாலா அசால்ட்டாக நடித்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது...
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ் ஸ்டோரி எனக்கு மிக முக்கியமான படம். தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது முக்கியம், அதை தன் படமாக எடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு என் நன்றி. என்னை வாழ்த்த எனக்காக வந்த எழில் சார், அருள் தாஸ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் என்னை நம்பி பயணித்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பிரேமலு ரிலீசான அன்று அது யாருக்கும் தெரியாது, அடுத்த ஷோவில் உலகத்திற்கே தெரிந்தது. அது போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். பிரேமலு மாதிரி பெரிய கலக்ஷன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்.


Click it and Unblock the Notifications











