களைகட்டப்போகும் CII தக்ஷின் 2023.. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது
சென்னை: இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Condederation of Indian Industry) நடத்தும் தக்ஷின் 2023 மாநாடு ஏப்ரல் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடக்கவிருக்கிறது.
சிஐஐ தக்ஷின் மாநாடானது தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு தொடர்புடைய வழிகாட்டுதலை வருங்கால சந்ததியினருக்கு வழங்கும் வகையில் இருக்கிறது. திரைத்துறையின் சங்கமம்ஒரு திரைப்படம் எப்படி உருவாகுகிறது, அதன் நோக்கம், திட்ட அமைப்பு, தொழில்நுட்ப முக்கியத்துவம் போன்ற பல அம்சங்களை விளக்கும் வகையிலான பல கருத்தரங்குகள் மற்றும் உரையாடல்கள் தக்ஷின் மாநாட்டில் நடைபெறுவதால் சினிமா மீது ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

சிஐஐ தக்ஷின் மாநாடு 2022
கடந்த ஆண்டு ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடந்த இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இரண்டு நாள்கள் நடந்த அந்த மாநாட்டில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஏ.ஆர். ரஹ்மானின் இசை கச்சேரியும் கோலாகலமாக நடந்தது குறிபிடத்தக்கது.

சிஐஐ தக்ஷின் 2023 மாநாடு
இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான சிஐஐ தக்ஷின் மாநாடு ஏப்ரல் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் சென்னையில் இருக்கும் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. சென்ற வருடம் போலவே இந்த வருடத்திற்கான தக்ஷின் மாநாட்டையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

முதல்நாள் நடக்கவிருக்கும் செஷன்கள்
தக்ஷின் 2023 மாநாட்டின் முதல் நாளில் காலை 10 மணியிலிருந்து 11.15 மணிவரை மாநாட்டின் தொடக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது. காலை 11.15லிருந்து மதியம் 12.30வரை உலக தாக்கத்தில் தென்னிந்திய சினிமா மற்றும் அதன் உலகளாவிய தாக்கம் என்ற அமர்வும், அதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு என்ற அமர்வு என மொத்தம் 8 அமர்வுகள் முதல் நாளில் நடைபெறவிருக்கின்றன.

இரண்டாவது நாள் நடக்கும் அமர்வுகள்
இரண்டாம் நாள், குறைந்த பட்ஜெட் படங்களின் எதிர்காலம் என்ற அமர்வு முதலில் நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஊடகம் மற்றும் பொழுதுபோக்கில் புதிய டெக்னாலஜி, ஒரு கதை சொல்லட்டுமா என மொத்தம் 8 அமர்வுகள் நடைபெறவிருக்கின்றன. இரண்டாம் நாள் இரவு 7 மணியுடன் இந்த மாநாடு நிறைவடைகிறது.

சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர்
மாநாட்டின் இரண்டாவது நாளில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார். மேலும் விழாவின் நிறைவாக அவர்தான் விருதுகளையும் வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

சிறப்பு பேச்சாளர்கள் யார் யார்?
இந்த மாநாட்டில் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், பால்கி, விஜயேந்திர பிரசாத், விக்னேஷ் சிவன், ரவிசங்கர், அனுராக் காஷ்யாப், ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி உள்ளிட்டோர் பேச இருக்கின்றனர். அதேபோல் தனுஷ், சிரஞ்சீவி, கார்ஹ்த்டி, மஞ்சு வாரியர், வெங்கடகிருஷ்ணன் ஆழ்வார், அனுபமா சோப்ரா, ஸ்ரீதர் பிள்ளை, கிருஷ்ணன் குட்டி உள்ளிட்டோரும் பேச இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











