'அம்மாடீ.. வேற லெவல் ப்ரொமோஷன்' - இந்தக் காசுல பல படங்களை எடுத்துடலாம் போல..!
துபாய் : '2.ஓ' படத்தின் இசை வெளியீட்டுக்காக துபாய் முழுக்க பயங்கரமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. '2.ஓ' ரஜினியின் உருவம் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் எல்.இ.டி விளக்குகளால் ஒளிர இருக்கிறதாம்.
இந்தப் படத்தின் விளம்பரத்தோடு நடுவானில் ஸ்கை டைவிங் விளையாட்டும் நேற்று நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு ஹாலிவுட்டில் '2.ஓ' ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் '2.O' படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக இன்று நடைபெற இருக்கிறது.

பல கோடி செலவு
'2.0' படத்தின் இசை வெளியீடு இன்று துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக லைகா நிறுவனம் பல கோடி ரூபாய் செலவில் ப்ரொமோஷன் பணிகளை பிரமாண்டமாக மேற்கொண்டு வருகிறது.
பயங்கர ப்ரொமோஷன்
இந்தப் படத்தின் ப்ரொமோஷன் செலவிலேயே சில படங்களைக் கூட எடுத்துவிடலாம் என்று சொல்லுமளவிற்கு இந்தியத் திரையுலகத்தை மட்டுமல்லாது ஹாலிவுட் திரையுலகத்தையும் வியக்க வைக்கும் அளவிற்கு இந்தப் படத்தின் இசை வெளியீட்டை நடத்துகிறார்கள்.

புதுசு புதுசா ஐடியா
'2.0' படத்தின் பிரமோஷனுக்காக பல புதிய விஷயங்களைச் செய்து வருகிறார்கள் படக்குழுவினர். ஏற்கெனவே ஹாலிவுட்டில் ராட்சத பலூனை பறக்க விட்டார்கள். நேற்று படத்தின் பேனரைப் விளம்பரத்தோடு 10000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் நடத்தினார்கள்.
ரஜினி உருவம்
இன்று இசை வெளியீட்டு விழா நடக்கும் புர்ஜ் பார்க் கட்டிடத்தின் அருகில் இருக்கும் உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா டவரில் ரஜினியின் '2.0' படத்தின் தோற்றப் புகைப்படம் விளக்குகளால் ஜொலிக்குமாறு செய்யப்பட்டுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வேற லெவல்
புர்ஜ் கலீஃபா டவரில் சில சிறப்பு நிகழ்வுகளுக்கு எல்.இ.டி விளக்குகளால் ஜொலிக்குமாறு செய்வது வழக்கம். அது போலவே இன்றைய '2.0' இசை வெளியீட்டுக்கும் செய்ய உள்ளார்கள் எனத் தெரிகிறது. அதன்படி செய்தால் அது பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் மக்களின் கவனத்தை ஈர்க்கும்.


Click it and Unblock the Notifications











