»   »  '2.ஓ' ரன்னிங் டைம் பற்றி அதிர்ச்சி தகவல்... இதுக்குதான் ஹாலிவுட் படம்னு சொன்னீங்களா?

'2.ஓ' ரன்னிங் டைம் பற்றி அதிர்ச்சி தகவல்... இதுக்குதான் ஹாலிவுட் படம்னு சொன்னீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
2.0 படம் ஹாலிவுட் தரம் என்பதை டைமிங்கிலும் நிருபித்த ஷங்கர்

சென்னை : இயக்குனர் ஷங்கர் தற்போது 400 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கிவரும் '2.O' படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கிராஃபிக்ஸ் ஹாலிவுட் தரத்தில் இருக்கவேண்டும் என இயக்குனர் உறுதியாக இருப்பதால் சென்ற வருடமே வெளியாகவேண்டிய 2.O ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிபோனது.

'2.O' படம் குறைவான நேரம் மட்டுமே இருக்குமாம். ஹாலிவு படம் போல 100 நிமிடங்களில் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


2.ஓ

2.ஓ

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் '2.ஓ' படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்கே பலகோடி செலவழிக்கப்பட்டுள்ளது.


ஹாலிவுட் தரம்

ஹாலிவுட் தரம்

இப்படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக காம்ப்ரமைஸ் ஆகாமல் வேலை வாங்கி இருக்கிறாராம் ஷங்கர். கிராஃபிக்ஸ் வேலைகளால் தான் படம் ஏப்ரல் வரை தள்ளிப் போயிருக்கிறது.


ரன்னிங் டைம்

ரன்னிங் டைம்

தற்போது படத்தின் ரன்டைம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான இந்தியப் படங்களை போல 150 நிமிடங்கள் இல்லாமல், ஹாலிவுட் படங்களை போல 100 நிமிடம் மட்டுமே இருக்குமாம்.


ஹாலிவுட் படங்களைப் போல

ஹாலிவுட் படங்களைப் போல

ஆங்கிலத்திலும் '2.ஓ' படம் வெளியாகும் என்பதால் தான் இவ்வளவு நேரம் தான் என முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் என கூறப்படுகிறது. இன்டர்வெல் இல்லாமல் படம் வெளியாகுமா எனத் தெரியவில்லை. இது படக்குழுவினரால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Rajinikanth, Akshay Kumar and Amy Jackson are playing lead roles in the movie '2.O'. '2.O' will be only a short running time. Without the typical Indian films runing duration of 150 minutes, there will be only 100 minutes like Hollywood films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X