ரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா?

By Vignesh Selvaraj

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் '2.ஓ' திரைப்படம் 'காலா' படத்துக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில், கிராஃபிக்ஸ் பணிகள் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இதனால் அதற்கு முன்பே, ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'காலா' திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. காலா படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

2PointO teaser release on IPL final?

கிராஃபிக்ஸ் பணிகள் முடிந்து '2.ஓ' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், டீசர், ட்ரெய்லர் ஆகியவற்றின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், '2.ஓ' படத்தின் டீசர் மே 27-ம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஃபைனல் போட்டியின்போது வெளியிடப்பட இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சமீபத்தில், சிஎஸ்கே மேட்ச்சின்போது, ஆர்ஜே பாலாஜியின் புதிய பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல, ரஜினி படத்தின் டீசரும் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

'2.ஓ' படத்தின் ப்ரொமோஷனுக்காக பல கோடிகளை செலவு செய்து வரும் லைகா நிறுவனம், டீசர் வெளியிட பயங்கர விளம்பரங்களை மேற்கொள்ளும். இப்படி திடீரென வெளியிடவேண்டிய அவசியமில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X