3 BHK Box Office: தேவயானியும் சரத்குமாரும் சேர்ந்து கொடுத்த இன்னொரு ஹிட்.. வசூலை அள்ளுறாங்களேப்பா!

சென்னை: இயக்குநர் சாய் கணேஷ் இயக்கத்தில் உருவாகி கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் 3 BHK. இந்த படத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி, ரிது ரகுநாத், சாய்த்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் டிரைலர் உள்ளிட்ட பல விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால், படம் வசூலிலும் கலக்கி வருகிறது. படத்தின் முதல் இரண்டு நாட்கள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

3 BHK படத்தில் சரத்குமாரும் தேவயானியும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்தே 90களில் பல படங்களை ஆண்டுக் கணக்கில் ஓட வைத்த ரசிகர்கள் உற்சாகம் ஆகிவிட்டார்கள். சூர்யவம்சம் என்ற எவர் க்ரீன் படத்தைக் கொடுத்த ஜோடியை மீண்டும் ஒன்றாக திரையில் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் பலருக்கும் திருப்தியைக் கொடுத்தது. இந்த தலைமுறைக்கும் வாழ்க்கை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருந்ததுதான் விக்ரமனின் சூரியவம்சம். அதேபோல் 3 BHK படத்தின் மூலம் வாழ்க்கை மீதான நம்பிக்கையை இன்னும் உறுதிப் படுத்தி உள்ளார்கள்.

படத்தின் கதை, அதன் திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு என அனைத்துமே பெரும்பான்மை மக்களோடு ஒன்றிப் போகக் கூடிய படமாகத்தான் உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் 3 BHK மாதிரியான படங்கள் நிறைய வரவேண்டும். இது மட்டும் இல்லாமல் இது போன்ற படத்திற்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு கொடுக்க வேண்டும் என படத்திற்கு புரோமோஷன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த மே மாதத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் எமோஷன்கள் நிறைந்த ஃபேமிலி எண்டர்டெயினர் மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது.

3 BHK Box Office Collection Goes Well Fans Gives Massive Support Suryavamsam Pair Sarathkumar Devayani Reunion
Photo Credit:

பெண்கள் ஆதரவு: அதேபோல் 3 BHK படமும் எமோஷன்களை வைத்து உருவாக்கப்பட்ட படமாக உள்ளதால், பெண்கள் மத்தியில் ஏக போக வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்து வருகிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

இரண்டாவது நாள் வசூல் விபரம்: படம் முதல் நாளில் ரூபாய் ஒரு கோடி வசூல் செய்ததாக சாக். நிக் வலைதளம் தெரிவித்திருந்தது. இந்த ஒரு கோடி ரூபாய் வசூல் கணக்கு என்பது இந்தியாவில் படம் வசூலித்த தோராயக் கணக்குதான். இந்நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் என்பது முதல் நாளைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது. அதாவது, இரண்டாவது நாளில் படம் ரூபாய் ஒரு கோடியே 44 லட்சங்கள் வசூல் குவித்ததாக முதற்கட்டமாக தெரிவித்துள்ளது. இது முதல் நாளை காட்டிலும் அதிகம் என்பதால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

வணிக வெற்றி: மேலும் இன்று அதாவது ஜூலை 6ஆம் தேதி வார இறுதி நாள் என்பதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது மட்டும் இல்லாமல், வார நாட்களில் படத்தின் வசூலானது கணிசமான அளவு இருந்துவிட்டால் படம் வணிக ரீதியாக பிரம்மாண்டமான வெற்றிப் படமாக மாறிவிடும். 3 BHK படத்தின் வசூலால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X