லோகேஷ் கனகராஜைப் பார்த்து பொறாமையா.. பொட்டில் அறைந்ததைப் போல பதில் சொன்ன 3 BHK இயக்குநர் பளீச்!
சென்னை: இயக்குநர் சாய் கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3 BHK படம் வரும் ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் சரத்குமார், தேவையானி, சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் புரோமோசன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், " இந்த படத்தில் தேவயானி மேடம் நடிக்க வைக்க காரணம். அம்மா கதாபாத்திரத்திற்கு யார் என யோசிக்கும் போது எனக்கு உடனே தோன்றியது தேவயானி மேடம் மட்டும் தான். அதன் பின்னர் வேறு யாருமே எனக்கு தோன்றவில்லை. காரணம் தேவயானி மேடம் இடம் இருக்கும் அப்பாவித்தனம் மிகவும் முக்கியமான காரணம். 3 BHK படத்தின் மூலம் எனது 8 தோட்டாக்கள் படத்தில் கிடைத்த ரசிகர்களை மீண்டும் சம்பாதித்து விட வேண்டும் என்பதுதான். ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் மனதில் ஒன்றிப் போக கூடிய படமாக ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகும் என நம்புகிறேன்.
எல்லா காலகட்டங்களிலும் ரசிகர்கள் நல்ல படங்களுக்கு அவர்களின் ஆதரவை கொடுத்துக் கொண்டே இருந்துள்ளார்கள். இடைப்பட்ட காலத்தில் அதிகப்படியான ஆக்ஷன் படங்களே வந்து கொண்டு இருந்ததால் மக்களுக்கு ஒரே மாதிரியான படங்களே வந்து கொண்டு இருந்ததாக தோன்றியிருக்கலாம். குட் நைட் மிகவும் முக்கியமான படம். நாமும் இந்த மாதிரி படம் எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கும்போதுதான் அந்த படம் வெளியானது. குட்நைட் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது.

லோகேஷ் மீது பொறாமையா: லோகேஷ் கனகராஜையும் என்னையும் ஒப்பிடுபவர்களுக்கு நான் பொதுவாக பதில் அளிப்பதில்லை. அவர்களுக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை. நானும் லோகேஷ் கனகராஜும் அதே நட்புடன் தான் இருக்கிறோம். லோகேஷின் உயரத்தை நான் என்னவாக நினைக்கிறேன் என்பதுதான் முக்கியம். லோகேஷ் பெரிய படங்கள் பண்ணுகிறார் என நான் அவரைப் பார்த்து பொறாமைப் பட்டதில்லை. அது பொறாமையாக மாறினால் தவறாக மாறிவிடும். லோகேஷ் கனகராஜின் உயரத்தை நான் உத்வேகமாக பார்க்கிறேன்.
தனி பாணி சினிமா: இது போன்ற படங்கள் பண்ணும்போதுதான் லோகேஷ் கனகராஜ் தனக்கென தனி சினிமா உலகத்தை திரைப்படவியலை உருவாக்கியுள்ளார்,. நாமும் அதுபோலத்தான் நமக்கென தனி திரைப்படவியலை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். இயக்குநராக மிகவும் முக்கியமான விஷயம் நாம் ஒரு படம் பண்ணுவதில்லை. மாறாக நமக்கென தனி பாணி திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
வெற்றி தோல்வி: நான் இன்னும் அதிக படங்கள் பண்ணவேண்டும் என்று நினைக்கிறேன். வெற்றி தோல்வி என்ற பதத்தையே பயன்படுத்தக் கூடாது என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பின் பற்றி வருகிறேன். ஒரு படம் பண்ணும்போது அந்த படத்தின் மூலம் நாம் ஒரு உயரத்தை எட்ட நினைக்கிறோம். அதை அடைந்தோமா இல்லையா என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, வணிக ரீதியான வெற்றி, தோல்வி, வசூல் இவை எல்லாமே கூடுதலாக நமக்கு கிடைப்பது. 3 BHK படத்தை மக்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும் படமாக மாற்ற வேண்டும் என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











