3 BHK: என்னோட குடும்பத்துல எல்லாரும் வந்துட்டாங்க.. சித்தார்த்தை கழட்டிவிட்டுட்டு சரத்குமார் ரீல்ஸ்

சென்னை: சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியுள்ள படம் 3 BHK. இந்த படம் அடுத்த வாரம் அதாவது ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தை எட்டுத்தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் அண்மையில் அளித்த பேட்டியில் இந்த படத்தில் தேவயானியை அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க என்ன காரணம் எனக் கேட்டபோது மிகவும் சுவாரசியமான பதிலை அளித்தார். அவரது பதிலில், " இந்த படத்தில் தேவயானி மேடம் நடிக்க வைக்க காரணம். அம்மா கதாபாத்திரத்திற்கு யார் என யோசிக்கும் போது எனக்கு உடனே தோன்றியது தேவயானி மேடம் மட்டும் தான்.

3 BHK Movie Recreate Evergreen Suriyavamsam Movie Scene Sarathkumar Devayani Siddharth
Photo Credit:

அதன் பின்னர் வேறு யாருமே எனக்கு தோன்றவில்லை. காரணம் தேவயானி மேடம் இடம் இருக்கும் அப்பாவித்தனம் மிகவும் முக்கியமான காரணம். 3 BHK படத்தின் மூலம் எனது 8 தோட்டாக்கள் படத்தில் கிடைத்த ரசிகர்களை மீண்டும் சம்பாதித்து விட வேண்டும் என்பதுதான். ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் மனதில் ஒன்றிப் போக கூடிய படமாக ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகும் என நம்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

சரத்குமார் - தேவயானி: நடிகை தேவயானியும் நடிகர் சரத்குமாரும் இணைந்து நடித்த சூரியவம்சம் திரைப்படம் தமிழ் சினிமாவிலேயே இருக்கும் எவர் கிரீன் படங்களில் டாப் லிஸ்ட்டில் இருக்கும் படம். இந்த படத்தில் தேவயானி கதாபாத்திரத்தைப் போல் தங்களது வாழ்க்கையிலும் வாழ்க்கைத் துணை வரமாட்டார்களா என ஏங்கும் 90ஸ் கிட்ஸ்கள் இப்போது வரை உள்ளார்கள்.

3 BHK Movie Recreate Evergreen Suriyavamsam Movie Scene Sarathkumar Devayani Siddharth
Photo Credit:

ரீ கிரியேட்: இந்த படம் எப்படி ரசிகர்களுக்கு ஃபீல் குட் அனுபவத்தைக் கொடுத்ததோ அதேபோல், 3 BHK படமும் ரசிகர்களுக்கு ஃபீல் குட் அனுபவத்தை கொடுக்கும் என நம்பிக் கொண்டு உள்ளார்கள். படத்தின் புரோமோஷன் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூரியவம்சம் படத்தின் காட்சி ஒன்றை 3 BHK படக்குழுவினர் ரீ கிரியேட் செய்துள்ளார்கள். அதாவது, சூரிய வம்சம் படத்தில் இடம் பெற்ற காட்சியான குடும்பப் புகைப்படம் எடுக்கும் காட்சியை ரீ கிரியேட் செய்துள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். ஜூலை 4ஆம் தேதி இயக்குநர் ராமின் பறந்து போ படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X