3 BHK Public Review: சரத்குமார் - தேவயானி காம்பினேஷன் சூப்பர்.. பாராட்டிய ரசிகர்கள்.. மகிழ்ச்சியில் படக்குழு!
சென்னை: நடிகர்கள் சரத்குமார், சித்தார்த், தேவயானி, சைத்ரா, மீதா ரகுநாத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இயக்குநர் சாய் கணேஷ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் 3 BHK. நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்களுக்கு வீடு என்பது அவர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை, பேசும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் இந்த படம் எப்படி உள்ளது என்பது குறித்து தெரிவித்துள்ளார்கள். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ரசிகர் ஒருவர் கூறும்போது, " 3 BHK படம் எமோஷனலாக மிகவும் சூப்பராக உள்ளது. இது போன்ற படங்கள் பார்த்து மிகவும் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. குடும்பமாக பார்க்க தகுதியான படம். இது மட்டுமல்லாமல், நமது வீட்டில் எப்படி இருப்போமோ அதுபோல இந்த படம் உள்ளது. 8 தோட்டக்கள் போன்ற படத்திற்கு பின்னர் இந்த படம் முற்றிலும் வித்தியாசமான படமாக உள்ளது. பெற்றோர்களை விட்டு விட்டு போகிறேன் எனக் கூறுபவர்கள் இந்த படத்தைப் பார்க்க வேண்டும். படம் முடியும்போது என்னடா அதுக்குள்ள படம் முடிந்துவிட்டது என்ற எண்ணத்தை இந்த படம் ஏற்படுத்திவிட்டது" எனக் கூறினார்.

படத்தின் பிளஸ்: இன்னொரு ரசிகர் கூறும்போது, " நடுத்தரக் குடும்பம் வீடு வாங்க என்னென்ன மாதிரியான சவால்களை எதிர் கொள்கிறார்கள் என்பதுதான் இந்த படமே. படம் ரொம்பவும் நன்றாக உள்ளது. இசை சூப்பராக உள்ளது. முதல் பாதி எமோஷனலாகவும் இரண்டாம் பாதி அழகாகவும் உள்ளது. இதுதான் இந்த படத்தின் பிளஸ் பாய்ண்ட். படத்தில் எல்லோருமே நன்றாக நடித்திருந்தார்கள். படத்தின் கிளைமாக்ஸில் வீட்டை வாங்கி வென்று விட்டார்கள் என்ற எண்ணம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது" எனக் கூறினார்.
அழ வைத்த சரத்குமார்: இன்னொரு ரசிகர் கூறும்போது, " சித்தார்த் நடிப்பில் மிரட்டி விட்டுவிட்டார். சரத்குமார் அழ வைத்துவிட்டார். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை படம் ஏற்படுத்தியுள்ளது. படம் ரொம்ப பிடித்துள்ளது. சென்னையில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடு வாங்குவது என்பது எந்த அளவுக்கு சிரமமானது என்பதை மிகவும் தத்ரூபமாக கொண்டுவந்துள்ளார்கள். அப்பாவின் கஷ்டத்தை மகன் எப்படி புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுகிறான் என்பது மிகவும் டச்சிங்காக இருந்தது. சூரியவம்சம் ஜோடி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளதும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. மாஸ், மசாலா, கமர்ஷியல், குத்து பாட்டு போன்றவை இல்லாமல் இந்த படம் ஃபீல் குட் மூவியாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

சூரியவம்சம் 2: இன்னொரு ரசிகர் கூறுகையில், " இந்த படம் சூரியவம்சம் படத்தின் அடுத்த பாகம் போன்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது. விஜய் படங்களைப் பார்க்கும்போது கத்துவார்கள், விசிலடிப்பார்கள், ஆனால் இந்த படத்தைப் பார்த்தால் கிளைமாக்ஸில் எழுந்து நின்று கை தட்டுவார்கள். அப்படி ஒரு படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். படத்தை தியேட்டரில் பாருங்கள். அதன் பின்னர் படத்தை மிஸ் செய்துவிட்டோம் என புலம்புவதைக் காட்டிலும் இது போன்ற படத்தை தியேட்டரில் பாருங்கள். இசை, நடிப்பு, காதல் காட்சிகள் என மொத்த படமும் நன்றாக உள்ளது. எமோஷன்கள் தான் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது" எனக் கூறினார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











