பிக் பாஸ் 4வது தொடரில் கசாப் வக்கீல் கஸ்மி, பாக். நடிகை வீணா மாலிக் பங்கேற்பு

இன்று இரவு பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் நான்காவது அத்தியாயம் தொடங்குகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த ஷோ நடைபெறும். இதில் பங்கேற்போர் அனைவரும் ஒரே வீட்டில் மூன்று மாதங்களுக்கு வசிக்க வேண்டும்.
இதில் பங்கேற்போரில் முக்கியமானவர்கள் அப்பாஸ் கஸ்மி மற்றும் வீணா மாலிக் ஆகியோர்.
அப்பாஸ் கஸ்மிதான், தீவிரவாதி கசாப்பின் முன்னாள் வக்கீல் ஆவார். கசாப் குறித்து பல முக்கிய தகவல்களை இந்த நிகழ்ச்சியின்போது பங்கேற்பாளர்களுடன் கஸ்மி பகிர்ந்து கொள்ளலாம் எனத் தெரிகிறது.
அடுத்த நபர் வீணா மாலிக். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகையாவார். கவர்ச்சி நடிப்பில் பாகிஸ்தானில் பிரளயத்தை ஏற்படுத்தியவர். பாகிஸ்தானின் ராக்கி சாவந்த் என்ற செல்லப் பெயரையும் கொண்டவர் வீணா. அதேபோல கிரிக்கெட் சூதாட்டத்திலும் இவர் தொடர்புடையவராக கருதப்படுகிறது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப்பின் முன்னாள் காதலியாவார்.
இவர்கள் தவிர போஜ்புரி சூப்பர் ஸ்டார் மனோஜ் திவாரி, சாக்ஷி பிரதான், மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட், சமீர் சோனி, ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய பேகம் நவாஸிஸ் அலி (பாகிஸ்தானைச் சேர்ந்தவர்), அஷ்மித் படேல், சாரா கான், ஸ்வேதா திவாரி, திருடனாக இருந்து பின்னர் மனம் மாறியவரான டெல்லியின் பன்டி, ஆன்சல் குமார், சீமா பரிஹார், ரிஷாந்த் கோஸ்வாமி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.


Click it and Unblock the Notifications











