அடக் கடவுளே.. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 3 பேருக்கு கொரோனா.. ரசிகர்கள் ஷாக்!

ஹைதரபாத்: தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

Recommended Video

Bigg Boss 4 Tamil Contestants List • Kamal Hassan | Filmibeat Tamil

சினிமா மற்றும் சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடங்க முடிவு செய்துள்ளனர்.

ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் விரைவில் தொடங்க உள்ளன.

ஷூட்டிங் நிறுத்தம்

ஷூட்டிங் நிறுத்தம்

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிற்பாதியில் தியேட்டர்கள் மூடப்பட்டன. ஷூட்டிங் நிறுத்தப்பட்டன. ஒட்டு மொத்த திரையுலகமும் முடங்கி போய் நின்றது குறிப்பிடத்தக்கது. இன்னமும் தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைத்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், சல்மான் கான், டோலிவுட்டில் நாகார்ஜுனா மற்றும் கோலிவுட்டில் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர். பெரிய படங்களின் ஷூட்டிங்கும் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்க ஆரம்பித்து வருகிறது. ஆனாலும், ஒரு சில படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மீண்டும் முடங்கும் நிலையும் உருவாகி வருகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தியில் சல்மான் கான், தெலுங்கில் நாகார்ஜுனா மற்றும் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் டீசர்கள் அண்மையில் வெளியாகி வைரலாகின. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ள சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ள நிலையில், கொரோனாவிடம் இருந்து தப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் படக்குழுவினர் உள்ளனர்.

3 பேருக்கு கொரோனா

3 பேருக்கு கொரோனா

இந்நிலையில், தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 16 போட்டியாளர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சியை எப்படி நடத்தப் போகிறோம் என்ற கவலையில் பிக்பாஸ் குழு மூழ்கி உள்ளது.

இந்த முறை யூடியூபர்களும்

இந்த முறை யூடியூபர்களும்

வெறும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மட்டுமின்றி தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை மை வில்லேஜ் ஷோ மூலம் பிரபலமான மில்குரி கங்காவா எனும் பிரபல யூடியூபரும் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கொரோனா பாதிக்கப்பட்ட 3 பேரில் அவரும் ஒருவர் என்ற தகவல் கசிந்துள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், யூடியூபர்கள் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

வேறு நபர்கள்

வேறு நபர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள், டெக்னீஷியன் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் 14 நாட்கள் குவாரண்டைன் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் போது தான் 3 போட்டியாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. வரும் செப்டம்பர் 6ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக, வேறு போட்டியாளர்களை நிகழ்ச்சி குழு தேடி வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X