twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இந்தியன் 2' படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து... 3 பேர் பலியான சம்பவம்... நடந்தது என்ன?

    By
    |

    Recommended Video

    Indian 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து

    சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது தெரியவந்துள்ளது.

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'. இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இப்போது இயக்கி வருகிறார்.

    சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

    ஈவிபி பிலிம் சிட்டி

    ஈவிபி பிலிம் சிட்டி

    இதன் ஷூட்டிங் நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது. நேற்றிரவு 9.40 மணியளவில் சண்டைக் கலைஞர்கள் மற்றும் அரங்கம் அமைப்பவர்கள் பணியில் இருந்தனர். இரவு நேரம் என்பதால் ராட்சத கிரேன்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கொண்டிருந்தன. அப்போது திடீரென கிரேன் கீழே விழுந்தது.

    படுகாயமடைந்தனர்

    படுகாயமடைந்தனர்

    இதில், கீழே பணியில் இருந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது படக்குழுவைச் சேர்ந்த மான்சிங், வாசு, ரம்ஜான், அருண்பிரசாத், குமார், கலைசித்ரா, குணபாலன், திருநாவுக்காரசு, முருகதாஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றனர்.

    உயிரிழந்தனர்

    உயிரிழந்தனர்

    ஆனால், அங்கு உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன் (60), புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது (29) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து நசரத்பேட்டை போலீசா வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டரில், இது கொடூரமான விபத்து என்று தெரிவித்துள்ளார்.

    துயரம் பன்மடங்கு

    துயரம் பன்மடங்கு

    அவரது ட்வீட்டில், எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    நம்பிக்கையுடன்

    நம்பிக்கையுடன்

    மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்' என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனமும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    உணர்வைச் சொல்ல

    உணர்வைச் சொல்ல

    அதில், இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த எதிர்பாராத விபத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது ஆகிய 3 டெக்னிஷியன்களை இழந்து நிற்கிறோம். எங்கள் உணர்வைச் சொல்ல வார்த்தைகள் இல்லை' என்று தெரிவித்துள்ளது.

    இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்தால் 3 பேர் பலியான சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈவிபியில் விஜய் நடித்த பிகில் படப்பிடிப்பின்போதும் நடந்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Crane crashing down on Indian 2 film location near Poonamallee late on Wednesday; 3 dead and nine injured
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X