இன்றைய ரிலீஸ்... பர்மா, சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன்!
இந்த வெள்ளிக்கிழமையும் நேரடி, டப்பிங் எல்லாம் சேர்த்து 6 படங்கள் திரையைத் தொட்டுள்ளன.
கடந்த இரு வாரங்களில் வெளியான படங்களை மக்கள் பார்த்து முடிக்கும் முன்னரே இத்தனைப் படங்கள் திரைக்கு வருவதால், அந்தப் படங்கள் அரங்குகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வாரம் வெளியாகியுள்ள படங்கள் விவரம்...

பர்மா
தரணிதரன் இயக்கியுள்ள பர்மா படத்தில் மைக்கேல், ரேஷ்மி மேனன் நடித்துள்ளனர். சுதர்சன் எம் குமார் இசையமைத்துள்ளார். ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

சிகரம் தொடு
விக்ரம் பிரபு நடித்துள்ள நான்காவது படம் சிகரம் தொடு. கவுரவ் இயக்கியுள்ளார். மோனல் கஜ்ஜார் நாயகியாக நடித்துள்ளார். சத்யராஜும் படத்தில் உள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.

வானவராயன் வல்லவராயன்
கிருஷ்ணா, ஆனந்த், மோனல் கஜ்ஜார்,கோவை சரளா, ஜெயபிரகாஷ் நடித்துள்ள வானவராயன் வல்லவராயன் இன்று வெளியாகி, சில அரங்குகளில் முதல் காட்சி போடப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது, நீதிமன்றத் தடை காரணமாக. பல அரங்குகளில் இன்னமும் இந்தப் படத்தின் பேனர்கள் அகற்றப்படாமலேயே உள்ளன. எப்படியும் சிக்கல் தீரும் என்று நம்புகிறார்கள்.
நகைச்சுவையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டுள்ள படம். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராஜமோகன் இயக்கியுள்ளார்.

பிற படங்கள்
ரவி தேஜா - ஹன்சிகா நடித்த தெலுங்குப் படமான பவர் இன்று வெளியாகியுள்ளது. மலையாளப் படம் பையா பையா, ஆங்கிலத்தில் லூசி (தமிழில் தி பிரின்ஸ்) போன்ற படங்களும் இன்று வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











